தேவனுடைய வார்த்தை அவிசுவாசத்தினின்று முழுவதுமாக பிரிந்து வரும்படி அழைக்கிறது GOD'S WORD CALLS FOR A TOTAL SEPARATION FROM UNBELIEF ஜனவரி 21, 1964 பீனிக்ஸ், அரிசோனா, அமெரிக்கா 1. ....நான் இங்கு எழுதி வைத்துள்ள சில வேத வாக்கியங்களுக்கு.., அதை பொருள் என்று அழைக்க முடியுமானால் (அதை பொருள் என்று அழைக்க-லாமா கூடாதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒரு பொருளாக). “தேவனுடைய வார்த்தை அவி சுவாசத்தினின்று முழுவதுமாக பிரிந்து வரும்படி அழைக்கிறது'' என்னும் சுருத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 2. இப்பொழுது வேதாகமத்திலிருந்து படிக்க விரும்புகிறேன். ஆதியாகமம் 13-ம் அதிகாரம், 5-ம் வசனத்திலிருந்து படிக்கத் தொடங்கலாம். வார்த்தையைப் படிப்பதில் எனக்கதிகப்பிரியம். ஏனெனில் நான் கூறுவது, ஒரு மனிதன் கூறுவது தவறாகலாம். ஆனால் இந்த வார்த்தையை நான் படிப்பேனானால், அவர் கூறுவது ஒரு போதும் தவறாகாது. இந்த வார்த்தையை வெறுமனே படித்தாலும் கூட, அதிலிருந்து நன்மை பிறக்குமென்று அறிந்திருக்கிறேன். 13-ம் அதிகாரம், 5-ம் வசனத்திலிருந்து தொடங்குவோம். ஆபிராமுடனே இந்த லோத்துக்கும் ஆடு மாடுகளும் கூடாரங் களும் இருந்தன. அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்த பூயி அவர்களைத் தாங்கக் கூடாதிருந்தது. அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்த படியால், அவர்கள் ஒருமித்து வாசம் பண்ண ஏதுவில்லாமற் போயிற்று, ஆபிராமுடைய மந்தை மேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானா னியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள். ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்ப ருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன் இருக்கிறது அல்லவா? நீ என்னை விட்டுப் பிரிந்து போகலாம்; நீ இடது புறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான். அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாய் இருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும் முன்னே, சோவாருக்குப் போகும் வழி மட்டும் அது கர்த்த ருடைய தோட்டததைப் போலவும் எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதை யும் தெரிந்து கொண்டு, கிழககே பிரயாணப்பட்டுப் போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தரனுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம் பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான். சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள். லோத்து ஆபிராமை விட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி; உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும் கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார். நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து..... ஆதி. 13: 5-15 3. தேவனுடைய வார்த்தை முழுவதுமாக பிரிந்து வரும்படி அழைக்கிறது. என்னும் கருத்து. நாம் வார்த்தையைப் படித்து, வார்த்தை தன்னை வெளிப் படுத்துவதைக் காணும்போது, இதை நாம் அறிந்து கொள்கிறோம். 4. ஆதியிலே பூமியின் மேல் இருள் இருந்ததாக நாம் காண்கிறோம். தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டு இருந்தார் அவர்,' வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்றார். (ஆதி.1:3). அப்பொழுது வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத் தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். எனவே ஆதிமுதற் கொண்டு, தேவனுடைய வார்த்தை வெளிச்சத்தையும் இருளையும் வெவ் வேறாகப் பிரித்து வருகின்றது. இன்று வரை அது அவ்வாறேயுள்ளது. 5. நேற்று இரவு நான் கூறினது போன்று, இயேசுவுக்கு 12-வயதானபோது, அவருடைய தாய் ஒரு தவறு செய்தாள். (மரியாள் தேவனுடைய தாய் என்று ஜனங்கள் கூறுகின்றனர்.) அந்த ஸ்திரீ. “இதோ, உன் தகப்பனும் (Father) நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே'' என்றாள். அவர் வார்த்தை- யாக இருந்தபடியால் உடனே, “என் பிதாவுக்கடுத்தவைகளில் (Father's business) இருக்க வேண்டியதென்று அறியீர்களா-?'' என்று கூறினார். (லூக்.2:48-49). பாருங்கள், அவர், யோசேப்பின் குமாரன் என்று பிரகடனம் செய்தாள். அவரோ யோசேப்பின் குமாரன் அல்ல. அவர் அப்படி யோசேப்பின் குமாரனாய் இருந்து இருப்பாரானால், அவனுடன் தங்கியிருந்திருப்பார். ஆனால் அவரோ அவர் உடைய பிதாவின் கூட இருந்து, பிதாவுக்கடுத்தவைகளில் ஈடுபட்டிருந்தார். எனவே வார்த்தை எப்பொழுதுமே சரியாயிருந்து. தவறைத் திருத்துகின்றது. 6. பூமியிலே...... தேவன் பூமியை உபயோகிக்கக் கருதினார், அது முழுதும் இருளாயிருந்தது. தேவ ஆவியானவர், "வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று உரைத்து இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரித்தார். அன்று முதல் அவர் அதையே செய்து வருகிறார் - இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரித்தல். 7. ஆதியிலே தேவனுடைய வார்த்தை பூமியிலிருந்து தண்ணீரைப் பிரித்தது. தேவன் உரைத்தார். அப்பொழுது தண்ணீர் பூமியிலிருந்து பிரிந்தது. அதற்கு அவருக்கு ஒரு காரணம் இருந்தது. காரணமின்றி தேவன் ஒரு வார்த்தையைக் கூட உரைக்க மாட்டார். அவர் உங்களையும் என்னையும் போல் அல்ல. முக்கியமாக என்னைப் போல். நான் அநேக மூடத்தனமான காரியங்களைப் பேசுகிறவன். தேவன் ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு காரணத்துடன் பேசுகின்றார். அவருடைய வார்த்தையின்மூலம் அவர் ஒன்றை நிறைவேற்றுகிறார் அது எதை நிறைவேற்றும் என்று அவர் கூறுகிறாரோ, அது அப்படியே நிறைவேறும். 8. தேவன், "வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று கூறி வெளிச்சம் உண்டாகாமலிருந்தால் அதை தேவன் கூறவில்லை. பாருங்கள்-? தேவன் ஒன்றைக் கூறும்போது, அவர் அதை நிறைவேற்றியே ஆக வேண்டும். அவர் கூறின வார்த்தை நிரூபிக்கப்பட்டு, வெளிச்சம் உண்டானது. வார்த்தை வெளிச்சம் அல்ல. ஆனால் வெளிச்சம் தோன்றிய காரணத்தால், வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டது. “வெளிச்சம் உண்டாகக்கடவது" என்று தேவன் கூறி, வெளிச்சம் உண்டாகாமல் போனால், அது தேவனுடைய வார்த்தை அல்ல. ஆனால் பூமியிலே வெளிச்சம் உண்டான போது, அது தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினது என்பதை எடுத்துக் காண்பித்தது. வெளிச்சம் உண்டானது. 9. இன்று தேவன் ஒரு வாக்குத்தத்தம் செய்து அது உறுதிப்படும் போது, அதுவே வெளிச்சமாகும். அது இந்நாளுக்கான வெளிச்சம் - இம்மணி நேரத்துக்குரிய வார்த்தை உறுதிப்படும் போது. 10. தாவரங்களை முளைப்பிக்கவும், ஜனங்கள் தங்குவதற்கும் தேவனுக்கு பூமி அவசியமாயிருந்தது. அவர் வார்த்தையை உரைத்து தண்ணீரையும் வெட்டாந்தரையையும் பிரித்தார். அது மாத்திரமல்ல, அவர் ஆதியாகமத்தில் மரணத்தில் இருந்து ஜீவனைப் பிரீத்தார். 11. நாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்போமானால், அது நமக்கு ஜீவ வார்த்தையாயிருக்கும். ஆனால் நாம் தேவனுடைய வார்த்தையை சந்தேகித்தால், அது நமக்கு மரணமாயிருக்கும். தேவன் பேசினார். யார் அதை மறுக்க முடியும்-? பாருங்கள்-? நாம் தேவனுடைய வார்த்தையை சந்தேகித்து கேள்வி கேட்டால், அது மரணமாகி விடுகின்றது-ஏவாளுக்கு நேர்ந்தது போல்.' 12. ஏவாள் தேவனுடைய வார்த்தையின் ஒரு சிறு பாகத்தை மாத்திரம் சந்தேகித்தாள். அது என்ன செய்தது-? அது நமக்குள்ள தொல்லைகள் அனைத்தையும் விளைவித்தது. அவள் மாத்திரம் வார்த்தையை அரணாகக் கொண்டு, தேவனுடைய சர்வாயுதவர்க்கமாகிய வார்த்தையின் பின் மறைந்து இருந்து, அதை சந்தேகிக்காமல் இருந்திருந்தால், அது இந்த விதமாக நடந் திருக்காது. அது அப்படி ஒருக்காலும் நடந்திருக்காது. ஆனால் பாருங்கள், மரணம் நேரிட்டது. 13. ஆனால் தேவன் ஒரு பலியை வைத்திருந்தார். நம் மீது அவர் இரக்கம் கொண்டிருந்த காரணத்தால், அவர்களுடைய மரணத்திற்கு பதிலாக அவர் ஒரு பலியை ஏற்றுக்கொண்டார். இரண்டும்...... 14. அவர் ஏதேன் தோட்டத்தில் மரணத்திலிருந்து ஜீவனைப் பிரித்தார். அவர் அதை தமது வார்த்தையின் மூலம் செய்தார், இன்றும் அவர் அதையே செய்கிறார். நாம் பயங்கரமான இருளில் இருந்தபோது (ஞாயிறன்று அதைக் குறித்து பேசினேன்); பூமியின்மேல் இருள், ஜனங்களின்மேல் இருள், பயங்கர-மான இருள். இவைகளின் மத்தியில் அவர் இப்பொழுதும், வார்த்தையை விசுவாசிக்க விரும்புகிறவர்களுக்கு, ஜீவ வார்த்தையைப் பேசி வருகிறார். 15. இப்பொழுது நாம் பார்க்கிறோம்..... ஒரு பிரிவினை உள்ளதாக. இயேசு அடிக்கடி நம்மிடம் கூறி வந்துள்ளார். நாம் தேவனுடைய சமூகத்திற்கு செல்லவிருக்கும் அந்த கடைசி நாளுக்கு முன்பு கடைசியாக ஒரு பிரிவினை இருக்குமென்று மானிடவர்க்கத்துக்கு முன்னுரைக்கப்பட்டுள்ளது. அவர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிப்பார். 16. தேவன் தொடர்ச்சியாக பிரித்துக் கொண்டே வருகிறார். இன்றிரவும் அவர் அதை தான் செய்து கொண்டிருக்கிறார். அவர் எப்பொழுதும் அதையே செய்து வருகிறார். ஒவ்வொரு கூட்டத்திலும் நீங்கள் அதைக் காணலாம். அவர் அவிசுவாசத்தினின்று விசுவாசத்தைப் பிரிக்கிறார். அவர் வெளிப்படை-யாகப் பேசுகிறார். அவர் பேரில் விசுவாசமுள்ளவர்களுக்கு அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். 17. எண்ணாகமம் 6-ம் அதிகாரத்தில் நசரேய அழைப்பு ஒன்றுள்ளதென்றும், அது அவர்களை உலகத்தினின்று தேவனுடைய வார்த்தைக்கு வேறு பிரிக்கிறது என்றும் நாம் காண்கிறோம். அது தான் நசரேய அழைப்பு - பிரித்து எடுக்கப்படுதல். 18. சிம்சோன் தேவனுக்கென்று நசரேயனாக இருந்தான் என்று காண்கிறோம். அவன் ஒரு அடையாளத்தின் மூலமாக பிரித்தெடுக்கப் பட்டான். அந்த அடையாளம் என்னவெனில், அவன் தலைமயிரை நீளமாக வளரவிட்டு, அதை ஏழு சுருள்களாக (locks) சுருட்ட வேண்டும். அதுவே பிரித்தெடுக்கப்பட்டதன் அடையாளமாயிருந்து, ஒரு நோக்கத்திற்காக அவன் அழைக்கப்பட்டான் என்பதை எடுத்துக் காண்பித்தது. 19. இதைத் தொடங்க எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் நான் சில நிமிடங்கள் மாத்திரமே பேசப்போகிறேன் என்று கூறினேன். இன்று நமது சகோதரிகள் வேதத்திற்கு கீழ்ப்படிந்து தலைமயிரை நீளமாக வளரவிட்டு இருப்பதைக் காணும்போது, இவர்கள் தேவனைப் பின்பற்ற விரும்புகின்றனர் என்பதற்கு அது நசரேய அடையாளமாகத் திகழ்கின்றது என்று எண்ணுகி-றேன். அது மிக வெளிப்படையான வாக்குமூலம் என்று நானறிவேன். இது உங்களில் பதிய வேண்டும். பாருங்கள்-? ஏனெனில் அது உண்மை. தேவன் செய்யக் கூறினதை அவர்கள் செய்கின்றனர். அதற்காக என்ன கிரயம் செலுத்த வேண்டியிருந்தாலும், உலகம் அதைக் குறித்து என்ன கூறினாலும், பரியாசக்காரரும் குற்றங் கண்டு பிடிப்பவர்களும் எவ்வளவாக இகழ்ந்தாலும், உலகக்காரியங்களினின்று முழுவதுமாக பிரிந்து தேவனுடைய காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களை அது எந்த விதத்திலும் பாதிக்காது. அவர்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, உலகக் காரியங்களினின்று தங்களை வேறு பிரித்துக் கொள்வார்கள். ஏனெனில் வார்த்தை அவர்களைப் பிரிக்கிறது. 20. அவர்கள் கண்டனத்தைத் தாங்கிக் கொள்வார்கள் என்று எனக்குத் தெரியும். நம்மை யாரும் குற்றப்படுத்தவில்லை என்றால், ஏதோ தவறுள்ளது. உலகம் எப்பொழுதுமே தன்னுடையவர்களை அறிந்துள்ளது. நான் கூறின விதமாக, இதை ஞாபகம் கொள்ளுங்கள், தேவனுடைய வார்த்தையின் நிமித்தம் நாம் குற்றஞ்சாட்டப்படுதல் என்பது, அவருடைய கிருபையில் நாம் வளர ஏதுவாயுள்ள-வேதனையே. நீங்கள் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டுமென்று, கிறிஸ்தவர்களைப்போல் வாழ, தேவனுடைய கற்பனைக-ளுக்குக் கீழ்ப்படிய - உங்களைப் பிரித்துக் கொண்டீர்கள் என்பதை அது காண்பிக்கிறது. அதுவே நீங்கள் செய்யும் நசரேயப் பொருத்தனை உலகக் காரியங்களினின்று உங்களைப் பிரித்தெடுக்கும் தேவனுடைய அழைப்பு. 21. தேவனுடைய ஆவியால், பிறந்த ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும், ஒவ்வொரு பையனும் பெண்ணும் கர்த்தருக்கென்று நசரேயனாக உள்ளனர் என்பதை இன்றிரவு நான் நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் உலகக்கவலைக-ளினின்றும், உலகம் கூறும் அனைத்தினின்றும் தங்களை வேறு பிரித்து உள்ளனர். 22. சிறந்த பள்ளிகள் உள்ள இப்பட்டினத்தில் நீங்கள் வசிக்கின்றீர்கள். நமது நாடு உயர்தர கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதை நாம் காண்கிறோம். (அது நல்லது தான். அதைக் குறித்து ஒன்றும் கூறுவதற்கில்லை). ஆனால் கல்வி உங்களுக்கு இரட்சிப்பை அளிக்கமாட்டாது. ஒரு விஞ்ஞானி ஒரு கோதுமை மணியை உடைத்து அதில் எத்தனை இரசாயனப் பொருட்கள் உள்ளன, என்று உங்களிடம் கூற முடியும். ஆனால் அதிலுள்ள ஜீவனை அவனால் கண்டு பிடிக்க இயலாது. கல்வி உங்களுக்கு கணிதம், வரலாறு போன்றவைகளைக் கற்பிக்க முடியும். ஆனால் அது உங்களுக்கு ஜிவனை அளிக்க முடியாது. உங்கள் கல்வி அதை செய்ய முடியாது. உங்களுக்கு ஜீவனைக் கொண்டுவர தேவன் ஒரே ஒரு முறையைத் தான் கையாளுகிறார். அதாவது, நீங்கள் உலக காரியங்களினின்றும் உலகக் கவலைகளினின்றும் உங்களை வேறுபிரித்துக் கொண்டு, தேவனுடைய வாக்குத்தத்தத்தை இறுகப் பற்றிக் கொள்ளும் போது... 23. பவுல் கர்த்தருக்கென்று நசரேயனாக இருந்தான். அவன் தனது வைதீக சபையை விட்டுப் பிரிந்து, ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைக்கு வந்தான். ஆரோன் கர்த்தருக்கென்று நசரேயனாக இருந்தான். அவன் தன்னுடைய சகோதரரிலிருந்து பிரிந்து வந்து, கற்கள் பதிக்கப்பட்ட மார்க்கவசத்தை அணிந்து பிரதான ஆசாரியனானான். அது முழுவதுமாக பிரிந்து வருதல். நாம் மீண்டும் உலகத்திற்கு சென்று விடாமல், உலகத்துடன் எவ்வித தொடர்பும் கொள்ளாமல், தேவனை மாத்திரம் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். 24. உலக காரியங்களினின்றும், உலக கவலைகளினின்றும் பிரிந்து வந்த மணவாட்டிக்காக, ஸ்திரீக்காக, சபைக்காக, இயேசு கிறிஸ்து வருகிறார். அவள் நாம் வாழும் நவீன உலகத்தின் நாகரிகத்தினின்று பிரிந்து வந்தவள். அவள் சபை பாரம்பரியங்களினின்று பிரிந்து வந்தவள். அவள் பிரிந்து தேவனுடன் ஒன்றுபட்டிருக்கிறாள். தேவன் என்பது வார்த்தையே. எப்படி கணவனும் மனைவியும் ஒன்றாயிருக்கின்றனரோ, அப்படியே மணவாட்டியும் வார்த்தையும் ஒன்றாகி விடுகின்றனர் வார்த்தை மணவாட்டியின் மூலம் ஜீவிக்கின்றது. அது தான் அவளுடைய நற்சாட்சி பத்திரம். அதுவே அவளுடைய அடையாளச் சீட்டு. 25. நான் டாக்டர் பட்டம் பெற்றுக் கொண்டு, அந்த ஸ்தாபனமோ அல்லது பள்ளியோ அளித்த பட்டத்தாளைக் கொண்டிருப்பேனானால், அந்தப் பள்ளி அந்தப் பட்டத்தாளை அங்கீகரிக்கும். ஆனால் ஒரு விசுவாசி பெற்றுள்ள ஒரே அடையாளச் சீட்டு, தேவனுடைய வார்த்தை அவனுக்குள் ஜீவித்து, இயேசு கிறிஸ்து அவனுக்குள் வாழ்கிறார் என்பதைப் பிரகடனம் செய்வதே. அவன் தான் வார்த்தையின் நிமித்தம் பிரித்தெடுக்கப்பட்டு, கர்த்தருக்கென்று நசரேயனாக இருப்பவன். ''தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' என்று வேதம் கூறுகின்றது (எபி.4:12). அதனால் தான் இயேசு ஜனங்களைப் பார்த்து, அவர்களுடைய இருதயத்திலிருந்த சிந்தனைகளை அறிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் அவர் வார்த்தையாயிருந்தார். 26. இவ்வுலகில் பிறந்த முதலாம் ஆதாம்- அவன் பிறக்கவில்லை சிருஷ்டிக்கப்பட்டான். வார்த்தையிலிருந்து பிரிந்து தன் மனைவியுடன் இணைந்தான். அவன் விரும்பியிருந்தால், வார்த்தையில் நிலைகொண்டு இருந்திருக்க முடியும். ஆனால் அவனோ வார்த்தையிலிருந்து தன்னை வேறு பிரித்துக் கொண்டு, மனைவியுடன் இணைத்துக் கொண்டான். பொதுவாக அதையே மாமிசப்பிரகாரமான சபை அங்கத்தினன் இன்று செய்கிறான். அவன் உண்மையான ஜீவனுள்ள வார்த்தையிலிருந்து தன்னை வேறு பிரித்துக் கொண்டு அவனுடைய ஸ்தாபனத்துடன் இணைந்து கொள்கிறான். தேவன் தண்டிப்பாரா இல்லையா என்னும் கேள்வியை சாத்தான் ஏவாளிடம் கேட்டான். ஏவாள், சாத்தானின் வாக்கை நம்பினாள். பிறகு....... 27. இன்று ஸ்தாபனமும் வார்த்தையின் பேரில் கேள்வி கேட்கிறது. "அவர் மாறாதவராயிருக்கிறாரா-? அவர் இப்பொழுதும் சபையில் இருந்து கொண்டு, அவர் பூமியிலிருந்த போது செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் இப்பொழுதும் செய்கிறாரா-?'' அவர் யோவான்.14:12ல் அதை உறுதியாக வாக்களித்துள்ளாரே-! “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.” "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் (நிச்சயம்) தொடரும்'' (ஆங்கிலத்தில் "Shall follow'') 28. ஜனங்களின் மனதில் இன்று எழும் கேள்வி என்னவெனில், "அவர் நிஜமாகத்தான் கூறினாரா-?'' என்பதே. அவ்வாறு ஸ்தாபனம், "அவர் நிஜமாகத் தான் கூறினாரா-?'' என்று கேட்பதை நீங்களும் அங்கீகரித்தால், ஆதாமின் நிலையை நீங்கள் அடைந்து, ஸ்தாபனமாகிய ஸ்திரீயுடன் உங்களை இணைத்துக் கொண்டு, உலகத்தினின்று பிரிந்து வார்த்தையுடன் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்ளும் ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் அளிக்கும் ஆசிர்வாதங்களை இழந்து விடுகின்றீர்கள். அது உண்மை . 29. இக்காலத்திற்கென அளிக்கப்பட்ட வார்த்தை நிறைவேறுவதைக் கண் கூடாகக் காணும் சிலாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு காலத்திற்கும் தேவனுடைய வார்த்தை அளிக்கப்பட்டு, அது நிறைவேற வேண்டுமென்று நியமிக்கப்பட்டுள்ளது. அது அவ்வாறு அளிக்கப்படும்போது, அது எப்படி நிறைவேறும் என்று மனிதன் வியப்புறுகிறான். பேராசிரியர்கள் இதைக் குறித்து தங்கள் சொந்த கருத்தை உடையவராயிருக்கின்றனர். ஆனால் அந்தந்த காலங்களில் தேவன் தமது தீர்க்கதரிசியை அனுப்பினார். தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடம் வந்து, அந்த சந்ததியில் உள்ளவர்க்கு வார்த்தையை உறுதிப்படுத்துகின்றது. தீர்க்கதரிசிகள் எக்காலத்தி-ற்கும் நசரேயர்களே. அவர்கள் எல்லாவற்றினின்றும் பிரிந்து வந்து தேவனு டைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தனர். 30. பேதுருவும், யோவானும் கூறினது உங்களுக்கு ஞாபகமிருக்கிறது அல்லவா? பெந்தெகொஸ்தே அனுபவத்தைக் குறித்து அவர்கள் அவர்களைக் கேள்வி கேட்ட போது, அவர்களிருவரும், ''தேவனுக்குக் கீழ்ப்படிகிறதைக் காட்டிலும் மனிதருக்குக் கீழ்ப்படிகிறது நியாயமாயிருக்குமோ-?'' என்றனர் (அப்.4:19). 31. முதலாம் மனிதனாகிய ஆதாம் வார்த்தையிலிருந்து தன்னை வேறு பிரித்துக்கொண்டு தன் மனைவியுடன் சென்றான். அதன் விளைவாக, தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறாரா இல்லையா என்னும் கேள்வியை அவன் எழுப்பினான். வெது வெதுப்பான, மாம்சப்பிரகாரமான விசுவாசிக்கு அது எவ்வளவு பூரணமான முன்னடையாளமாகத் திகழ்கின்றது-! இப்படிப் பட்டவன், வார்த்தை கூறுவதை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக - அப்படித் தான் ஒரு உண்மையான விசுவாசி செய்வான். - அவர்களுடைய பாரம்பரியம் கூறுவதை இறுகப் பற்றிக் கொள்கிறான். ஆதாம் பிரிந்து தன் மனைவியுடன் இணைந்து கொண்டான். அவ்வாறே மாம்சப்பிரகாரமான விசுவாசியும் வார்த்தையிலிருந்து பிரிந்து ஸ்தாபனத்துடன் சேர்ந்து கொள்கிறான். ஆனால் இரண்டாம் ஆதாம் ஒரு ஸ்திரீயின் கருப்பையில் சிருஷ்டிக்கப்பட்டு, இவ்வுலகிற்கு வந்த போது, அவர் தேவனுடைய வார்த்தைக்கு 'நசரேயனாகத் திகழ்ந்தார். அவர் உலகத்தினின்று பிரிந்து வார்த்தையுடன் இணைந்தார். 32. எபிரேயர் 7-ம் அதிகாரம், 26-ம் வசனம் இவ்வாறு கூறுகின்றது. அதாவது, ஆசாரியர்கள் ஒவ்வொரு வரும் மரித்தனர். ஆனால் இயேசுவோ பரிசுத்தராய், பாவிகளுக்கு விலகினவராய் இருந்தார் என்று. பாவம் என்பது அவிசுவாசமே' அவரிடம் எங்கும் அவிசுவாசம் காணப்படவில்லை. அவர் இவ்வுலகில் இருந்த போது, "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்-?'' என்றார் (யோவான் 8:46). பாவம் என்பது அவிசுவாசம். "இக்காலத்திற்கென என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப் பட்டு உள்ளதோ, அதை நான் செய்யாமலிருந்தால்; மேசியா என்ன செய்வார் என்று கூறப்பட்டுள்ளதோ, அந்த மேசியாவுக்கு இருக்க வேண்டிய அவசியங்-களை நான் பூர்த்தி செய்யாமலிருந்தால், என்னை விசுவாசியாதேயுங்கள்" என்றார். அவர் மேலும், "வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச்சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்றார் (யோவான்.5:39) (அவர் யாரென்று உங்களுக்கு அறிவிக்கின்றன). ஒரு இரட்சகர் தோன்றுவாரென்று ஏதேன் முதற்கொண்டு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு வந்தது. 33. அவர் கன்னிகையின் வயிற்றில் பிறப்பாரென்றும், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்றும், அவர், ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன் என்றும் தீர்க்கதரிசி கூறினான். அதன் காரணமாகத்தான் அவர்கள் அவர் மேல் குற்றம் சாட்டினர். அவர் தம்மைத் தேவனாக்கிக் கொள்கிறார் என்று. அவர் தேவன், அவர் சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா. அவரைத் தவிர வேறு பிதா இல்லை. ஆவிக்குரிய பிரகாரமாக நாம் கூறுவோமானால். அவர் ஒருவர் மாத்திரமே பிதா, நம்மெல்லாருக்கும் பிதா. நாம் காண்கிறோம்....... எல்லா விசுவாசிகளுக்கும் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும் அனைவருக்கும். அவர் பிதாவாயிருக்கிறார். அவர் ஸ்தாபனத்தினின்றும், பாரம்பரியங்களினின்றும், தம் தாயினின்றும், உலகத்தினின்றும் முழுவதுமாக பிரிந்திருந்து, பிதாவுக்குப் பிரியமானவைகளை மாத்திரமே செய்தார். 34. அவர் ஆதாமைக் காட்டிலும் வித்தியாசமானவராயிருந்தார். அவரை -வார்த்தையை யார் கேள்வி கேட்ட போதிலும், அவர் வார்த்தைக்கு முதன்மை ஸ்தானம் கொடுத்து, அது சரியென்று நிரூபித்தார். சாத்தான் அதை மழுப்ப நோக்கின போது, அவர், "எழுதியிருக்கிறதே,'' ''ஆம், இப்படியும் எழுதி இருக்கிறதே'' என்று வார்த்தையைக் கொண்டே பதிலளித்தார். அவர் வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு சாத்தானை மேற்கொண்டார். ஏனெனில் அவரே வார்த்தையாயிருந்தார். 35. வேதத்தில், யோவான் முதலாம் அதிகாரம் இவ்வாறு கூறுகின்றது: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. மாம்சமாகி..... நமக்குள்ளே (நம்மிடையே) அந்த வார்த்தை வாசம் பண்ணினார். 36. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையுடன் அதற்கு தொடர்பு இருந்து கொண்டே வந்து உள்ளது. இக்காலத்திற்கென தேவன் அளித்துள்ள வாக்குத்தத்தம். அது நிகழும் போது, அது வழக்கத்திற்கு மாறாக உள்ள காரணத்தால், ஜனங்களால் அதை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. நாம் சடங்காச் சாரங்களுடனும், நமது சொந்த கருத்துக்களுடனும் அதிகமாக இணைந்துள்ளதால், சத்தியம் என்னவென்பதை கிரகித்துக் கொள்ள கடினமாகி விடுகிறது. 37. யோசேப்பின் நாட்களில் மரியாள் கர்ப்பமுற்றிருந்த போது, இது பொருந்தும் என்ன நினைக்கிறேன். மரியாள் தாயாக வேண்டிய நிலையில் இருந்தாள். யோசேப்பு அவளை அதிகமாக நேசித்தான். அவன் மிகவும் நல்லவன், 'நீதிமான். மரியாள், அவள் எப்படி கர்ப்பமுற்றாள் என்று அவனிடம் கூறினதை, அவன் நம்ப முயன்றான். ஆயினும் அவனுடைய மனதில், "அவள் நல்ல பெண் தான். ஆனால்......." என்னும் கேள்வி எழுந்தது. 38. காபிரியேல் தூதன் அவளைச் சந்தித்த விவரத்தை அவள் யோசேப்புக்கு விளக்கினாள் என்பதில் சந்தேகமில்லை, அவன் தாவீதின் குடும்பத்தில் பிறந்த ஒரு நீதிமான். ஆயினும், அவளுடைய நிந்தையைப்போக்கி அவளுக்கு பாதுகாப்பளிக்க அவனை, அவள் ஒருக்கால் உபயோகிக்கின்றாளோ என்று அவனுக்குத் தோன்றினது. ஏனெனில் அவள் அவனுக்கு நியமிக்கப்பட்டிருந்து, அவள் கர்ப்பமுற்று காணப்பட்டால், அது விபச்சாரமாகக் கருதப்பட்டு அவள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டுமென்று உபாகமம் நமக்குக் கூறுகின்றது. அவள் அவனை, ஒரு பாதுகாப்பாக உபயோகிக்கிறாள் என்பது போல் தோன்றினது. 39. யோசேப்பு மிகவும் நல்லவன், நீதிமான். வேதம் அவனை நீதிமான் என்று அழைக்கிறது. ஆனால் அவளுடைய விவகாரம் வழக்கத்திற்கு மாறாக இருந்தபடியால், அவனால் அதை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அவன் அவளுடைய அழகிய முகத்தை நோக்கி, அதில் உத்தமத்தையும் நேர்மையை யும் கண்டான். அவன் வீட்டிற்கு அல்லது தச்சப்பட்டறைக்குச் சென்று, ''அவள் என்னிடம் பொய் சொல்ல மாட்டாள், ஆனால் இது வழக்கத்திற்கு மாறாக உள்ளதே-!'' என்று எண்ணியிருப்பான். அவன் மாத்திரம் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்திருந்தால், ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள் என்பதை அறிந்திருப்பான். அது வழக்கத்திற்கு மாறாகவும், அவனுடைய கருத்துக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தது. ஆனால் அவளோ வார்த்தையை அப்படியே நிறைவேற்றுகிறவளாய் இருந்தாள். 40. சகோதரரே, இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையும், இம்மணி நேரத்திற்கென அவர் வாக்கு அளித்துள்ள வார்த்தையும் வழக்கத்திற்கு மாறாக அமைந்துள்ளதால், நல்லவர்கள் அதைக்கண்டு இடறுகின்றனர். அது மிக அசாதாரணமாய் உள்ளது. மரித்தோர் உயிரோடெழுகின்றனர், குருடர் பார்வையடைகின்றனர், செவீடர் கேட்கின்றனர், பரிசுத்த ஆவியானவர் மனிதரின் சிந்தனைகளைப் பகுத்தறிந்து, வரப்போகும் காரியங்களை முன்னறிவிக்கிறார்; அது ஒரு முறைகூட தவறினதில்லை. ஓ, அவர்களால் அதை கிரகித்துக் கொள்ள முடியவில்லை, அது மிகவும் வழக்கத்திற்கு மாறாக உள்ளது. எனவே அவர்கள் 'டெலிபதி' (Telepathy) என்றும், 'அசுத்தாவி' என்றும் கூறிவிடுகின்றனர். இயேசுவின் காலத்திலிருந்தவர்கள் செய்தது போல், தேவனுடைய வார்த்தையின் அசாதாரணமான தன்மை-! 41. ஆனால் இவ்வுலகில் பிறந்த விசுவாசி, வார்த்தைக்கு முரணாயுள்ள அனைத்தினின்றும் தன்னை முழுவதுமாக வேறு பிரித்துக் கொண்டு நசரேயனாகி விடுகின்றான். இயேசு, "நான் மனைவியையும் புருஷனையும் பிரிக்க வந்தேன் (குடும்பத்தில் பிரிவினை). தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல'' என்றார். எல்லாவற்றினின்றும் ஒரு பிரிவினை. ஸ்தாபனத்தினின்றும், சமுதாயத்தி-னின்றும், ஒரு பிரத்தியேக கருத்தினின்றும், அல்லது குடும்பத்தினின்றும், தேவனுடைய வார்த்தையை முழுவதுமாக விசுவாசிக்கக் கூடாதபடிக்கு உங்களுக்குக் குறுக்கே நிற்கும் எதனின்றும். இம்மணி நேரத்திற்கென அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குக்தத்தத்தையும் உங்கள் ஆத்துமா ஆமென்' என்று கூறி ஆமோதிக்காவிடில், எங்கோ தவறுள்ளது, உங்களுக்குப் பிரிவினை அவசியமாயுள்ளது. 42. இயேசு மாமிசத்தில் தோன்றிய வார்த்தையாயிருந்தார். அவர் பாவிகளிடமிருந்து, அவிசுவாசிகளிடமிருந்து முழுவதுமாக விலகியிருந்தார். அதன் விளைவாக அவர் மூலம் வார்த்தை முழுவதுமாக பாய்ந்தது. அவர், "என் பிதா முதலில் ஒன்றைச் செய்வதைக் காணாமல், நான் எதையும் செய்வதில்லை" என்றார். 43. அவர்கள் அவரிடம் அநேக கேள்விகள் கேட்டனர். அவரோ, "மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்'' என்றார் (யோவான்.5:19). கவனியுங்கள், அவர் கூறின அனைத்தும் பிழையின்று இருந்தது. அவர் அதை கேட்க வேண்டிய அவசியம் இல்லை, யோசிக்க வேண்டிய அவசியமில்லை. அது பரிபூரணமாக இருந்தது. அவருடைய பரிபூரண சத்தியம், தவறுகளிலிருந்து சத்தியத்தை வேறு பிரித்தது, 44. நான் கூறினதை மறுபடியும் கூறுகிறேன். அவருடைய தாய், " உன் தகப்பனும் நானும்,'' என்று கூறிவிட்டாள். அவள் ஆசாரியர்களின் முன் நிலையில், அவர் கன்னிகையின் வயிற்றில் பிறந்தவர் என்று ஏற்கனவே சாட்சி பகர்ந்திருந்தாள். ஆனால் அவளுடைய துயர நேரத்தில்... 45. எப்படி 12-வயதுள்ள ஒரு சிறுவன், அவர் பள்ளிக்குச் சென்றதாக சான்றுகள் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சிறுவன் ஆசாரியர்களுடனும் மேதைகளுடனும் தர்க்கம் செய்யும் அளவுக்கு ஞானத்தைப் பெற்றிருக்க முடியும்-? யோசேப்பு அவருடைய தகப்பன் என்று மரியாள் கூறினதுபோது, தேவனுடைய வார்த்தை உடனே எப்படி தவறைத்திருத்தினது-? அவர் பிரிக்கப் பட்டிருந்தார். அவரே வார்த்தை, அந்த வார்த்தை தவறைத் திருத்தினது. ''என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா?'' அப்படி கூறினது அந்த 12-வயது சிறுவன் அல்ல. தேவனுடைய வார்த்தை அந்த சிறுவனின் வாயின் மூலம் பேசி, தவறைத் திருத்தி, ஆதியில் அவர் செய்தது போல் இருளினின்று வெளிச்சத்தையும், பொய்யினின்று சத்தியத்தையும், மரணத்திலிருந்து ஜீவனையும் வேறு பிரித்தது. அது பிரிவினை. 46. எப்பொழுதும் முழுவதுமாக பிரிந்துவருதலே வார்த்தைக்கு அவசியமாய் உள்ளது. ''எல்லா மனிதருடைய வார்த்தைகளும் பொய்யாகவும், என் வார்த்தை சத்தியமாகவும் இருப்பதாக'' என்று இயேசு கூறினார். காலங்கள் தோறும் இதுவே நிகழ்ந்து வந்துள்ளது. அது பிரிக்கின்றது. அவர் எப்பொழுதுமே தமது பிள்ளைகளை அவிசுவாசத்தினின்று பிரிக்கிறார். ஆதியில் அவர் அதை செய்தார் இன்றும் அதையே செய்கிறார். தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவரும் அவிசுவாசத்தினின்று வேறு பிரிக்கப்பட்டனர்..... அதற்கு காரணம், தேவனுடைய வார்த்தை அவர்களிடம் வந்தது. 47. ஒரு இரவு எங்கேயோ--ஞாயிறு இரவோ அல்லது நேற்று இரவோ; இங்கு தான் என்று நினைக்கிறேன். பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள 'ஞான திருஷ்டிக்காரன்' என்பதற்கு அர்த்தம் என்னவென்று பேசினேன். அது, ''வரப் போகும் சம்பவங்களை முன் கூட்டி அறிவிப்பவன்'' என்று பொருள்படும். அது எவ்வித பிழையுமின்றி அப்படியே நிறைவேறினால், "அவனுக்குச் செவி கொடு" என்று தேவன் கூறினார், அவனுக்குச் செவி கொடு, அவனுக்குப் பயப்படு, ஏனென்றால். நான் அவனோடு கூட இருக்கிறேன்.'' அப்பொழுது எழுதப்பட்ட வார்த்தைக்கு தெய்வீக வியாக்கியானத்தை அவன் பெற்று இருக்கிறான். அதுவே அவன் தேவனுடைய தீர்க்கதரிசி என்றும், தேவன் உடைய வார்த்தை அவனிடம் வந்தது என்றும் அடையாளம் காண்பிக்கும் நற்சாட்சிப் பத்திரமாகும். அது உண்மை . 48. பிரித்தெடுக்கப்படுதல்'. அது ஏசாயாவை உலகத்திலிருந்த சபையினின்று வேறு பிரித்தது. அது மோசேயை உலகத்திலிருந்த சபையினின்று வேறு பிரித்தது. அது காலங்கள் தோறும் தோன்றின தீர்க்கதரிசிகளை உலகத்தின் சபையிலிருந்து வேறு பிரித்தது. ஏனெனில் அவர்கள்.. அது இயேசுவை தமது சகோதரரிலிருந்து வேறு பிரித்தது. அது அப்போஸ்தலர்களை அவர்கள் காலத்திலிருந்த சபையிலிருந்து, பரிசேயர், சதுசேயர், மகத்தானவர்கள், பரிசுத்தர்கள், நல்லவர்கள், அருமையானவர்கள், தாழ்மையுள்ளவர்கள், இயேசு வெளிப்படுத்தினதைக் காட்டிலும் ஆவியின் கனிகளை அதிகம். பெற்றிருந்த மனிதர் போன்றவர்களிடமிருந்து வேறு பிரித்தது. ஆனால் இயேசுவின் நற் சாட்சிப் பத்திரம் எது? வார்த்தை அவருடன்கூட இருந்தது. அக்காலத்திற்கென வாக்களிக்கப்பட்டிருந்த வார்த்தை அவர் மூலமாக ஜீவித்தது. அவர், “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப் படுத்தக் கூடும்-? நான் உரைத்தது நிறைவேறவில்லையென்று உங்களில் யார் சொல்லக் கூடும்-?'' என்றார். அவர் கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட நசரேயன் என்பதைக் காண்பித்தார். அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட கர்த்தர். 49. ஆபிரகாம்கூட. உலகத்தினின்று வேறு பிரிக்கப்பட்டவனாய் இருந்தான். அவனுக்கு 75-வயதானபோது, கர்த்தர் அவனை அழைத்து, "நீ உன் இனத்தா-ரையும், எல்லா அவிசுவாசத்தையும் விட்டுப் பிரிந்து, இதற்கு முன்பு நீ சென்றிராத தேசத்திற்கும், அறிந்திராத ஜனங்களிடத்திற்கும் போ. நீ விசுவாசிப்பதற்கு முரணாக விசுவாசிக்கும் எவரிடமிருந்தும் பிரிந்து வா. அப்பொழுது நீ கர்த்தருக்கென்று நசரேயனாயிருப்பாய்'' என்றார். ஏனெனில் அவன் குமாரனைக் குறித்த ஒரு வாக்குத்தத்தத்தை உடையவனாயிருந்தான். அவன் தன் தகப்பனை விட்டும், தாயை விட்டும், இனத்தாரை விட்டும் பிரிந்து வரவேண்டியிருந்தது. அவனைப் பிரித்தது எது? அவன் நல்லவன் என்பதனால் அல்ல. தேவன் அவனுக்கு அளித்திருந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று அவன் நம்பின காரணத்தால், 50. 25-ஆண்டுகள் கழித்தும் குழந்தை பிறக்கவில்லை. சாராளுக்கு 90-வயதும், அவனுக்கு 100-வயதும் ஆனது. கர்த்தருடைய தூதன் அவனைச் சந்தித்த போது (கடைசி நாட்களில் அது மறுபடியும் சம்பவிக்கும் என்று இயேசு குறிப்பிட்டுள்ளார்); தேவன் மனித ரூபத்தில் அவனுக்கு முன்பாக உட்கார்ந்து அவனுடன் உரையாடினார். ஏறக்குறைய 100-வயதாயிருந்த சாராள், அவருக்குப் பின்னால் கூடாரத்தில் உட்கார்ந்து கொண்டு, ஒரு உற்பவகால திட்டத்தில் உன்னிடத் திற்குத் திரும்ப வருவேன்'' என்று தூதன் கூறினதைக் கேட்டு நகைத்தாள். 51. அவள், ''நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ-?'' என்றாள். 52. இந்த மனிதன், மாமிசத்தில் தோன்றிய தேவன். "சாராள் ஏன் கூடாரத் தில் இருந்து கொண்டு நகைத்தாள்-?'' என்று கேட்டார். சாராள் வெளியே வந்து அதை மறுக்க முயன்றாள். அவரோ, “இல்லை, நீ நகைத்தாய்'' என்றார். அது கூடும் என்று அவள் விசுவாசிக்காத காரணத்தால் நகைத்தாள். 53. இப்பொழுது கவனியுங்கள், அது மறுபடியும் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். ''சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்.'' மறுபடியுமாக தேவனுடைய ஆவி மாமிச சரீரத்தில் இறங்கும். ஆபிரகாமிடம் சென்ற அந்த மனிதன் கன்றுக்குட்டியின் இறைச்சியைப் புசித்து, மாட்டின் பாலைக் குடித்து, வெண்ணெயும் அப்பமும் தின்றார். ஆபிரகாம் அவரை 'ஏலோகிம்' என்றழைத்தான். மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். தேவன் தமது வருகைக்கு முன்பாக மறுபடியும் மாம்ச சரீரத்தில் வெளிப்படுவார் என்று இயேசு வாக்களித்தார். அது பரிசுத்தாவி. தேவன் ஒருவரே. தம்மை வெளிப்படுத்தி, மறுபடியுமாக லோத்தையும் ஆபிரகாமையும் வெவ்வேறாகப் பிரிக்கிறார். 54. லோத்து உலகத்தை விரும்பினான். தேவன் அவனுடைய உலகத்தைக் கிழித்து ஆபிரகாமையும் லோத்தையும் வெவ்வேறாகப் பிரித்தார். லோத்து மாம்சப் பிரகாரமான விசுவாசிக்கு முன்னடையாளமாயிருக்கிறான். இவை உண்மையென்று அவன் கருதவில்லை. அவன் சோதோமுக்குச் சென்றான். தவறைத் தவறென்றும், உண்மையை உண்மையென்றும் எடுத்துரைக்க அவனுக்கு தைரியமில்லை. எனவே அவன் சோதோமுக்குச் சென்றான். 55. இந்த விசுவாசிகள் அனைவரும் (இதைக் குறித்து நாம் மணிக் கணக்காக பேசிக் கொண்டே போகலாம்) தேவனுடைய கரங்களில், உங்கள் ஜேபிகளிலுள்ள நாணயங்களைப் போல் இருக்கின்றனர். உங்கள் ஜேபிகளிலிருந்து நாணயங்களை எடுத்தால், அதில் ஒரு சென்டு, ஐந்து சென்டு, பத்து சென்டு, இருபத்தைந்து சென்டு, அரை டாலர், ஒரு டாலர் நாணயங்கள் கலந்து இருக்கும். இந்த உலகம் அப்படித்தான் தேவனுடைய கரங்களில் உள்ளது. சிலருக்கு ஒரு சென்டு மதிப்பு மாத்திரமே உள்ளது. தேவன் அவர்களை - ஒரு சென்டு அளவுக்கு தான் உபயோகிக்க முடியும். அதைக் கொண்டு அவ்வளவு மதிப்புள்ள பொருள் தான் வாங்க முடியும் அதன் காரணமாக அவர்களை நிராகரிக்க வேண்டாம். அவர்களால் உண்மையான சத்தியத்தை விசுவாசிக்க முடியாமற் போனால், அவர்களைத் தள்ளிவிட வேண்டாம். அவர்களை உதைத்துத் தள்ளி, அவர்கள் இதில் இல்லை என்று கூறிவிட வேண்டாம். சில நேரங்களில் தேவன் ஒரு சென்டு நாணயங்களையும் கூட உபயோகிக்கிறார். 56. லோத்து ஒரு சென்டு நாணயமாக இருந்தான். ஆபிரகாமோ ஒரு வெள்ளி டாலர். என்வே நூறு லோத்துக்கள் கொண்டது தான் ஒரு ஆபிரகாம். அது போன்று, உலகத்தின் மாம்சீகமான காரியங்களிலிருந்து பிரிந்து, கிறிஸ்து இயேசுவில் வாழ்ந்து, வார்த்தை அவன் வழியாகப் பாய்ந்து கொண்டு இருக்கும் ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு முன்னால் நூறு மாமிசப் பிரகாரமான விசுவாசிகள் நிற்க முடியாது. 57. அவனுடைய மதிப்பு ஒரு சென்டு மாத்திரமே. அவ்வளவு தான். எனவே ஜனங்கள், “எனக்கு தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கையில்லை, இவைகளை நான் நம்புவதில்லை'' என்று கூறுவார்களானால், அது ஒரு சென்டு என்று அறிந்து கொள்ளுங்கள். அப்படிப்பட்டவனை தனியே விட்டு விடுங்கள். பாருங்கள்? அவனுடைய மதிப்பு ஒரு சென்டு மாத்திரமே. அதைக் கொண்டு அவ்வளவுக்குத் தான் வாங்க முடியும். அவனை நிறுத்த வேண்டாம். அவனைத் தனியே விட்டுவிடுங்கள். அவ்வளவு தூரம் தான் அவன் செல்ல முடியும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். யோசேப்பு தன் சகோதரரிலிருந்து வேறு பிரிக்கப்பட்டான். நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. பாருங்கள்-? அவன் "நான் இதை சேர்ந்தவன், இதை தான் நாங்கள் விசுவாசிக்கிறோம்'' என்பானானால். 58. அது ஒரு சென்டு மாத்திரமே. அவன் அதில் சென்று கொண்டு இருக்கட்டும்.'' நல்லது சகோதரனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக'' என்று கூறுங்கள். அவன் ஒரு செம்பு நாணயம். அவன் வெள்ளி நாணயமாக ஆக முடியாது. அவன் அவ்வழியில் செல்ல விட்டு விடுங்கள், தேவன் அவனை உபயோகிக்க முடியும், அவனை மதுக்கடையில் காண்பதற்கு பதிலாக, ஒரு ஆலயத்தில் காண்பதையே நான் விரும்புவேன். நீங்களும் அப்படித்தானே-? நிச்சயமாக. எனவே அவனை விட்டுவிடுங்கள், எப்படியாவது தேவன் அவனை உபயோகிக்க முடியும், அதிகமாக அல்ல. அவர்கள் தங்களை எவ்வளவுக்கு உபயோகிக்க அனுமதிக்கிறார்களோ, அவ்வளவுக்கு தேவன் அவர்களை உபயோகிப்பார். இதை நான் கரடுமுரடான முறையில் விளக்கினேன்... நான் என்ன கூற விரும்பினேனோ, அதை புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். பாருங்கள்? 59. அவன் சிந்தனையைப் பகுத்தறிதலையும், இந்நாட்களுக்கென வாக்கு அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய வல்லமையையும் விசுவாசிக்க முடியாது. பரிசேயர்களும் அக்காலத்தில் அதை விசுவாசிக்க முடியவில்லை. இயேசு தேவன் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஓ, இல்லை-! “நீ மனிதனாயிருக்க, உன்னை தேவனாக்கிக் கொள்கிறாய்" என்று அவர்கள் கூறினர் . 60. ஒரு நாள் அவர், அப்பங்களை அதிகரிக்கச் செய்த அந்த அற்புதத்தை நிகழ்த்திய பின்பு, ''நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்கு உள்ளே ஜீவன் இல்லை'' என்றார் (யோவான் 6: 53) 61. அவருடைய சபையோர் அவரை விட்டுப் பிரிந்து செல்வதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த மனிதன் நாம் நர-மாமிசத்தைத் தின்ன வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். நர-மாமிசத்தை தின்பதா-? ஓ, அது பைத்தியக்காரத்தனம்-! 62. மருத்துவர்கள், “இந்த மனிதனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. அவ்வளவு தான். ஆசாரியன் கூறினது சரியே.' அவனுக்குப் பைத்தியமே. அவனுடைய சரீரத்தைப் புசிக்கக் கொடுக்கிறானே-!'' என்றனர். 63. அவர் அவ்வளவு தான் கூறினார். பாருங்கள்-? ஆனால் ஆவிக்குரிய சிந்தை உடையவனோ... அவருடைய சீஷர்களுக்கு அது புரியாமல் இருந்து இருக்கலாம், அதன் அர்த்தம் என்னவென்று அவர்கள் அறியாமல் இருந்து இருக்கலாம். ஆயினும் அவர்கள் அதை விசுவாசித்தனர். ஏனெனில். அது யாரிடமிருந்து வந்தது-? தேவனுடைய குமாரன் என்று அவர்கள் 'அறிந்திருந்த அவரிடமிருந்து. 64. இந்த வேதாகமத்திலுள்ள அனைத்தும் எனக்குப் புரியாமல் இருக்கலாம். ஆயினும் அதை நான் விசுவாசிக்கிறேன். அது தேவனுடைய வார்த்தை. அதற்கு முரணாயுள்ள எதனின்றும் என்னை நான் பிரித்துக் கொள்ள விரும்புகிறேன். அப்படித் தான் நான் இருக்க முயன்று வந்துள்ளேன். 65. மற்ற சாராரை கவனியுங்கள் - அவர் அழைத்த அந்த 70-பேரை ஒரு நாள், ''மனுஷகுமாரன் தாம் இறங்கி வந்த பரலோகத்துக்கே மறுபடியும் செல்வார்'' என்றார். 66. அவர்கள், “இந்த மனிதனா-? அவர் பிறந்த இடத்துக்கு எங்களைக் கூட்டிச் சென்றிருக்கிறாரே-! அவருடைய தாயாகிய மரியாளை நாங்கள் அறிவோம். அவருடைய சகோதரரையும் அறிவோம். இவை அனைத்தும் எங்களுக்குத் தெரியும். அப்படியிருக்க மனுஷகுமாரன் தாம் முன்பிருந்த பரலோகத்துக்கு மறுபடியும் ஏறிச் செல்வார் என்கிறாரே-! அவர் பெத்லகேமில் பிறந்தவராயிற்றே-! பின்னை ஏன் அப்படி கூறினார்-?'' என்றார்கள். பாருங்கள், அவர் அவ்வாறு கூறினார். அன்று முதல் அவர்கள் அவருடன் கூட நடக்கவில்லை, அவரை விட்டு அகன்று சென்றனர். "ஆ, இந்த மனிதனுக்கு ஏதோ கோளாறு உள்ளது'' என்றனர். 67. ஆனால் சீஷர்களோ அவருடன் கூட இருந்தனர். பாருங்கள்-? அவர்கள் விசுவாசித்தனர். அந்நாளுக்கென வாக்களிக்கப்பட்ட வார்த்தை அவரால் உறுதிப்படுத்தப்பட்டு வெளிப்படுவதை அவர்கள் கண்டனர். தேவனைத் தவிர யார் சிருஷ்டிக்க முடியும்-? அந்த அப்பத்தை எடுத்து... அவர் தேவனுடைய குமாரன் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அது உ.வமைகளாயிருந்தாலும் இல்லையென்றாலும், அவர்களுக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும், அவர் உடன் அவர்கள் நடந்து சென்றனர். ஏனெனில் வார்த்தை உறுதிப்படுத்தப் பட்டது. அதற்கு முரணாயுள்ள அனைத்தினின்றும் அவர்கள் தங்களை வேறு பிரித்துக் கொண்டனர். 68. அப்படிப்பட்ட விசுவாசத்தை நாம் பெற்றிருக்க தேவன் உதவி புரிவாராக-! இந்த வேதாகமம் உண்மையென்று நாம் விசுவாசிக்கிறோம். அதில் காணப்படும் எல்லா வாக்குத்தத்தங்களும் நிறைவேறும் அளவுக்கு எனக்குப்போதிய விசுவாசம் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் நான் விசுவாசிக்கிறேன். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரம் என்னவென்று நான் அறிந்திருக்கிறேன். 69. யோசேப்பு எவ்வித முகாந்தரமுமின்றி தன் சகோதரரிடமிருந்து பிரிக்கப் பட்டான். அவனிலிருந்த தவறு என்ன-? அவன் தன்னைப் பிரித்துக்கொள்ள சித்தம் கொள்ளவில்லை, ஆனால் அவர்களோ தங்களை அவனிடமிருந்து பிரித்துக்கொண்டனர். பாருங்கள்-? பளபளப்பான வெள்ளி டாலர் நாணயத்துக்கு முன்பு சென்டு நாணயங்கள் நிற்க முடியவில்லை. அவர்கள் கோத்திரப் பிதாக்கள் என்பதை அறிந்திருந்தனர். ஈசாக்கு, என்னை மன்னிக்கவும்---யாக்கோபு அவர்கள் தகப்பனென்று அவர்கள் அறிந்திருந்தனர். அது உண்மை என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் யோசேப்போ ஆவிக்குரியவனாய் பிறந்தான். அவன் அதற்கு பொறுப்பல்ல. அவன் ஆவிக்குரியவன். அவன் தரிசனங்களைக் கண்டான், சொப்பனங்களுக்கு அர்த்தம் உரைத்தான்; அவை பிழையின்றி நிறைவேறின. அவன் கூறின அனைத்தும் உண்மையாய் இருந்தன. கோத்திரப்பிதாக்களாகிய அவனுடைய சகோதரர்கள் பொறாமையி-னால் நிறைந்து, அவனை எகிப்தியர்களுக்கு விற்றுப்போட்டனர். பாருங்கள், அவர்கள் தங்களை அவனிடமிருந்து வேறு பிரித்துக் கொண்டனர். ஏனெனில் அவர்கள் ஒரு சென்டு நாணயங்களாய் இருந்தனர். அவன் வேறு தரம் உடையவனாயிருந்தான். 70. இன்றைக்கு உண்மையான விசுவாசியும் அவ்வாறே இருக்கிறான். அவன் வேறு தரமுடையவன். அவர்கள் தங்களை விசுவாசிகளிடமிருந்து பிரித்துக் கொள்வார்கள் - செம்பு வெள்ளினின்று பிரிதல். அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. 71. அவர்கள் பொறாமையினால் நிறைந்து யோசேப்பை விற்றுப்போட்டதாக காண்கிறோம். ஏன்-? இன்றைக்கும் அவர்கள் அதையே செய்கின்றனர். உண்மையில் அது என்னவெனில்... அது பொறாமையின் காரணமாக. அவர்கள் மனந்திரும்ப விரும்பவில்லை. ஏனெனில் அவர்களுடைய தரம், அவனுக்கிருந்த தரம் அல்ல. அதன் காரணமாக அவர்கள் பொறாமை கொண்டனர். ஏனெனில் அவர்கள் ஒரு சென்டு நாணயங்கள், அவனோ ஒரு டாலர் நாணயம். 72. ஒரு சென்டு நாணயம், “கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். என் டாலர் சகோதரனே, உனக்குள்ள மாற்றம் எனக்கிருக்க முடியாது. என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்'' என்று கூறுமானால்... நாம் தொடர்ந்து செல்வோம். தேவன் தமது திட்டத்தை நிறைவேற்றுவார். 73. ஞாயிறன்று உங்களிடம் நான் பிரசங்கித்தது போன்று, தேவனுடைய வார்த்தையாகிய மகத்தான இன்னிசை (Symphony) இசைக்கப்படும்போது, அதில் வரும் மாற்றங்கள், நிறுத்தங்கள் எல்லாமே தேவன் காலத்தை மாற்றுவதைக் குறிக்கிறது. இன்னிசையை இசைக்கும் இயக்குநரைப் போன்று. காலங்கள் மாறுவதை நாம் கண்டு, இசை எழுதப்பட்ட தாளை நாம் பார்க்கும்போது, நாம் இந்த காலத்தில் இருக்கவேண்டும் என்பது தெளிவாகும். அவர்கள் அதை செய்யத்தான் வேண்டும். அதை அவர்கள் செய்யாமலிருக்க வழியேயில்லை. 74. இன்னிசை புரியாத மனிதனுக்கு அது எப்படியிருக்கும்-? அர்த்தமில்லாத சத்தத்தைப்போல். அது அவனுக்குப் புரிவதில்லை. அதில் அவனுக்கு சிரத்தை இல்லை. "அவர்கள் சீக்கிரம் முடித்தால் நலமாயிருக்கும், நான் வீட்டுக்கு செல்வேன்'' என்று அவன் நினைக்கிறான். ஏனெனில் இன்னிசை என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது. ஆனால் அதை இயற்றியவருக்கோ, தொடக்கத்திலிருந்து முடிவு வரை தெரியும். பாருங்கள்-? இயக்குநரும், இயற்றியவரும் ஒரே ஆவியில் இராவிட்டால், இயக்குநரால் அதை இயக்க முடியாது. ஏனெனில் அவையனைத்தும் சைகைகளால் காண்பிக்கப்படுகின்-றது. அந்த சைகை அதை உறுதிப்படுத்தாவிட்டால், இசைக்கருவி இசைப்பவர்கள் எவ்வாறு இசைக்க முடியும்-? ஆமென். அதுதான். 75. எக்காளம் விளங்காத சத்தமிட்டால், யுத்தத்துக்காக எப்படி ஆயத்தம் பண்ண முடியும்-? வார்த்தையை பார்த்து, நாம் எங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்பொழுது ஒரு சென்டு நாணயங்கள் என்ன செய்கின்றன என்பதை அறிவீர்கள். அதே சமயத்தில் நீங்கள், வார்த்தையை அறிந்து, ஜொலித்து, இந்த அடையாளங்கள் நிகழக் காத்திருப்பவர்களையும் காண்பீர்கள். பார்த்தீர்களா-? (சகோ. பிரான்ஹாம் விரல்-களைச் சொடுக்குகிறார் - ஆசி). 76. கிணற்றடியிலிருந்த அந்த ஸ்திரீயிடம் அவர், “உன் புருஷனை அழைத்து வா'' என்றார். அவள், “எனக்குப் புருஷன் இல்லை'' என்றாள். அவர், ''நீ சொன்னது சரிதான், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள்'' என்றார். 77. அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக எங்களுக்கு தீர்க்கதரிசிகள் இருக்கவில்லை. மேசியா வருகிறார் என்று அறிவேன். அவர் தீர்க்கதரிசியாயிருப்பார். அதை தான் அவர் செய்வார்'' என்றாள். அவர், “நானே அவர்'' என்றாள். 78. ஓ, மகத்தான இன்னிசையின் தாளம் கீழ் சாரீரத்திலிருந்து உச்ச சாரீரம் வரை சரியாக அமைந்தது. அவள் ஊருக்குள்ளே ஓடி, "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மேசியா இவர் அல்லவா-!'' என்றாள். நிச்சயமாக' பாருங்கள், இன்னிசை எழுதப்பட்டுள்ள இசைத்தாளில், விசுவாசத்தையும் அவிசுவாசத்தையும் பிரிப்பது என்னவென்பதை அவள் அறிந்து கொண்டாள். விசுவாசம் சபையினால் வருவது அல்ல. அது தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அது என்ன என்று அறிந்து கொள்வதன் மூலமாக வருவதாகும். 79. இன்றைக்கும் நாம் அதையே காண்கிறோம். அநேகர் வரங்களைக் கண்டு (நான் முடிக்கப் போகிறேன், இன்னும் ஐந்து நிமிடங்கள்), 'ஓ, என்ன மகத்தான காரியம்!'' என்று நினைக்கின்றனர். அவர்கள் வரங்களைப் பாவனை செய்ய முயல்கின்றனர். உங்களால் செய்யமுடியாது. நீங்கள் ஒரு சென்டு நாணயத்தை ஒரு டாலர் நாணயமாக மாற்ற முடியாது. அதை பத்து சென்டு நாணயமாகவோ, அல்லது ஐந்து சென்டு நாணயமாகவோ மாற்ற முடியாது. அது ஒரு சென்டு நாணயம் மாத்திரமே. உன்னை நீ ஒரு சென்டு நாணயமாக அறிந்து கொண்டு, மற்ற நாணயங்களுடன் செல்வாயானால், தேவன் உன்னை உபயோகிக்க முடியும். நாம் எல்லாவற்றையுமே செய்ய முடியாது... 80. அங்கு எல்லோருமே... கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை வெளியே அழைத்த போது, அவர்கள் ஒவ்வொருவரும் மோசே புரிந்த செயல்களையே செய்ய வேண்டுமெனும் அவசியம் இருக்கவில்லை ஆனால் அவர்கள் விசுவாசித்தனர். அது உண்மை. அவர்கள் மோசேயை விசுவாசித்தனர். அந்த மணி நேரத்திற்கு அது அடையாளமாகத்திகழ்ந்தது என்பதை அவர்கள் அறிந்து இருந்தனர். மோசே தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான் என்று தேவன் நிருபித்தார். அவர்கள் ''பார்வோனிடம் ஈட்டிகள் உள்ளன,'' என்றனர். 81. அவரோ, ''ஆனால் மோசேயிடம் என் வார்த்தை உள்ளது,'' என்றார். அது தான். பார்வோனிடம் சேனை இருக்கலாம். ஆனால் மோசே தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். ஏனெனில் அவன் தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்தான். வார்த்தை அவனிடம் வந்தது. அது சத்தியம் என்று உறுதிப்படுத்தப்பட்டது புழுதியை எடுத்து மேலே எறிந்து பேன்களை வர வழைத்தவர் ஜீவனுள்ள தேவனே. மனிதனால் அப்படி செய்ய முடியாது. ஒரு மனிதன் அங்கு நின்று கொண்டு, ''நாளை இந்நேரம் இன்னின்னது நடக்கும்,'' என்று கூறினான். அது நிறைவேறினது. பாருங்கள்-? மோசே தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எனவே பார்வோனிடம் எத்தனை ஈட்டிகள் இருந்தாலும், இருட்டறைகள் இருந்தாலும், எவ்வளவு செங்கல் அறுக்க வேண்டியிருந்தாலும் கவலை இல்லை. மோசே வார்த்தையை உடையவனாயிருந்தான். எனவே அவர்கள் வனாந்தரத்தில் பிரயாணம் செய்யத் தொடங்கினர். 82. தாத்தான் என்னும் பெயர் கொண்ட மனிதன் அங்கிருந்தான். அவன், ''மோசே மிஞ்சிப்போகிறான். நாங்கள் எல்லாரும் பரிசுத்தமானவர்கள். நாங்களும் மோசே செய்தவைகளைச் செய்யக்கூடும்'' என்றான். மோசே, “தேவனே, இது என்ன?'' என்றான் . 83. அவர், ''அவர்களை விட்டுப் பிரிந்து போ,'' என்றார். அவர் பூமியைப் பிளந்து தாத்தானையும் அவனைச் சேர்ந்த மனிதரையும் விழுங்கிப் போட்டார். அவர் வெளிச்சத்தை இருளினின்று பிரித்து தமது வார்த்தை உண்மையென நிரூபித்தார். அவர் இன்றும் அதே தேவனாயிருக்கிறார். 84. முடிப்பதற்கு முன்; நான் நேற்றிரவு உங்களிடம் கூறினேன். நான் முதலில் இங்கு வந்தபோது... நான் என்னைக் குறித்து கூறிக் கொள்வதாக நினைக்க வேண்டாம். அப்படி எண்னினால், அந்த எண்ணத்தை உங்கள் இருதயங்களிலிருந்து அகற்றி விடுங்கள். இதை நான் விசுவாசிக்கிறவர்-களுக்குக் கூறுகிறேன். காலங்கள்தோறும் என்ன நிகழுமென்று கூறப்பட்டு, அது உங்களுக்கு அப்படியே அறிவிக்கப்பட்டது (அதற்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள், நேற்று இரவு நீங்கள் கண்டது போல்). சிந்தனைகளைப் பகுத்தறிதல் உட்பட எல்லாமே, எப்படி போலியாட்கள் தோன்றி இவைகளைப் பாவனை செய்வார்கள் என்று. அவையாவும் அப்படியே நிறைவேறின. ஆனால் கடைசியாக ஒரு பெரிய காரியம் நிகழும். அதை நாம் அநேக ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அது முதலில் நிகழ்ந்த போது, மூன்றாம் முறை ஒன்று சிருஷ்டிக்கப்பட்ட போது; பின்பு நான்காம் முறை. அது ஐந்தாம் முறை நிகழ்ந்ததென்று சென்ற இரவு உங்களிடம் கூறினேன். அது சபைகளின் ஆலோசனை சங்கம் ஒன்றாக இணைய காத்துக் கொண்டிருக்கிறது. பிராடெஸ்டெண்டுகளும்... நான் ஞாயிறு காலை பேசினால்.., இல்லை, சனி காலை பேசினால், அதைக்குறித்து பேசவேண்டுமென்று உள்ளேன் பாருங்கள்-? அவை ஒன்று சேரும் போது, கர்த்தருடைய ஆவியானவர் அதற்கு விரோதமாய் கொடியேற்றுவார். 85. இப்பொழுது நான் கூறப்போவதற்கு சாட்சிகளாக இங்கு சிலர் அமர்ந்து உள்ளனர். அண்மையில் நான் கொலராடோவுக்குச் சென்றிருந்தேன். கடந்த இலையுதிர் காலத்தின் போது. வேட்டைக்காக அங்கு நான் பயணம் மேற் கொள்வதுண்டு. என்' விவாக நாளன்று வழக்கமாக அங்கு இருப்பேன். நானும் என் மனைவியும் விவாகம் செய்த போது, என் வேலையில் கிடைத்த பணத்தை ஒரு டப்பாவில் சேமித்து வைத்திருந்தேன். தேன் நிலவுக்கும் வேட்டைக்கும் செல்ல என்னிடம் போதிய பணமில்லை. எனவே இவ்விரண்டையும் ஒன்றாக இணைத்து, என் மனைவியை தேன்நிலவுக்காக கூட்டிச் சென்றேன். அன்று முதல், என் விவாக நாளன்று நான் வீட்டில் இருந்ததே இல்லை என்று கூற வெட்கப்படுகின்றேன். நான் அன்று கொலராாடாவில் இருப்பேன். 86. என்னுடன் வேட்டை முகாமில் இருந்த இரண்டு, மூன்று போதகர்கள் நேற்று இரவு இங்கு வந்திருந்தனர். அவர்களை வேட்டைக்குக் கூட்டிச் செல்ல நான் அலாஸ்காவிலிருந்து வந்து அவர்களைச் சந்திக்கும்படியாயிற்று. அவர்கள் தாம் மார்டின் பையன்கள். நேற்று இரவு அவர்கள் இங்கு வந்து இருந்தனர். பின்னால் உட்கார்ந்திருப்பவன், அந்த சிறு பையன்... அவனுடைய பெயர் எனக்கு மறந்து விட்டது. மகனே, நீயும் அப்பொழுது அங்கிருந்தாய் அல்லலா-? ஆம், ஒருக்கால்,.. சகோ.பாமர் இங்கிருக்கிறரா-? நான்... நாங்கள் மலையின் மேல் சென்றோம், நான் கொலராடோவில் ஒரு வழிகாட்டி. அங்கு அநேக ஆண்டுகள் நான் வேட்டையாடி வருகிறேன். 87. ஒவ்வொரு முறை எங்கள் விவாக நாளான அக்டோபர் 23-ம் தேதி வரும் போது; அடிரன்டாக் மலையின் மேல் எங்கள் தேன் நிலவின் போது என் மனைவியைக் கூட்டிச் சென்ற ஒரு இடம் உள்ளது. இந்த இடம் அது போன்றே உள்ளது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், இது சிறிது காற்றிலும் கூட சல சலக்கும் புன்னை மரங்கள் புதராக வளரும் பிரதேசம் ஆகும்.' அதுவோ வழவழப்பான மரங்களைக் கொண்ட இடம். நான் ஒவ்வொரு 23-ம் தேதியும் அங்கு சென்று, என் தொப்பியைக் கழற்றி, இத்தனை ஆண்டுகளாக எனக்கு உத்தமும் உண்மையுமாய் வாழ்ந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் செல்லும் போது எனக்கு உதவி செய்து வரும் அருமையான மனைவியை எனக்குத் தந்ததற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவது வழக்கம், 88. இந்த ஆண்டு, தேசமெங்கிலும் வறட்சியாய் இருந்தது போல், கொலராடோவிலும் வறட்சியாயிருந்தது. திடீரென்று அங்கு... எங்களுக்கு முன்னால் அங்கு 200-பேர்- -மன்னிக்கவும், ஏறக்குறைய 100-பேர்-முகாமிட்டு, 4 அல்லது 5 நாட்கள் வேட்டையாடினர். நான் ஒரு மானைச் சுட்டேன், நான் அநேக ஆண்டுகளாக வேட்டையாடிக் கொண்டிருந்த ஒன்று. ஆனால் மூடுபனி இறங்கினதால், அந்த மானை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. நாள் முழுவதும் அதை நான் துரத்தி வேட்டையாடிக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் வானொலியில், ''கண்ணை மறைக்கும் உறை பனிப்புயல் (blizzard) வரப் போகின்றது. அது ஒரே இரவில் 20-அடி உயரத்துக்குப் பனியைக் குவிக்கக் கூடும்'' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 89. எனவே நான் சகோதரரிடம் கூறினேன்... அவர்களை அழைத்து (மார்டின் பையன்களும் அங்கிருந்தனர்) “சகோதரரே, செய்தியைக் கேட்டீர்களா? இங்கு இருந்து வெளியேற விரும்பினால், உடனே புறப்படுங்கள். இல்லையென்றால் காலதாமதமாகி விடும். வேண்டுமானால் ஒரு வாரம் இங்கு தங்கலாம். ஆனால் நான் போக வேண்டும், ஏனெனில் அடுத்த ஞாயிறன்று முழு சுவிசேஷ வர்த்தகர் குழுவின் கூட்டம் எனக்கு டூசானில் உள்ளது. இருப்பினும், உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள். நீங்கள் தங்க விரும்பினால், நானும் உங்களுடன் தங்கி உங்கள் வழிகாட்டியாயிருப்பேன்'' என்றேன். அவர்கள் எல்லாரும், "நாங்கள் தங்குவோம், நாங்கள் தங்குவோம்'' என்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். 90. மார்டின் பையன்களிடம் அதிவேகம் செல்லும் மேட்டார் வாகனம் (Truck) இருந்தது. அங்கு வேட்டையாட இரண்டு மான்கள் இருந்தன. அந்த பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தோம், அவர்கள் புறப்பட்டு சென்றனர். அந்த இடத்தை விட்டு நகர அவர்களுக்கு விருப்பமில்லை. அவ்வளவு தான். இன்றிரவு அவர்கள் சாட்சியாக இங்கு அமர்ந்துள்ளனர். 91. அடுத்த நாள் நான், 'நல்லது...'' என்று நினைத்தேன். அவர்கள் சென்ற அன்று பனி பெய்யவில்லை. நான், ''என் மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவள் எனக்கு நல்ல மனைவியாக இருப்பதற்காக அவளுக்கு எவ்வளவாக நன்றி உள்ளவனாய் இருக்கிறேன் என்று தெரியப் படுத்துவேன். அது எங்கள் விவாக நாள். நாளை நான் அந்த இடத்திற்கு செல்வேன். பனி பெய்யும் முன்பு அங்கு செல்லக் கூடுமானால்" என்று மனதில் எண்ணினேன். நான் உள்ளே சென்றேன். ஆனால் அவள் தொலை பேசியில் கிடைக்கவில்லை. நான் திரும்பி வந்தேன். பட்டினத்திலிருந்த எல்லாருமே அந்த உறைபனியை எதிர் நோக்கியிருந்தனர். அன்றிரவு "கொலராடோவில் அது 20-அடி உயரத்திற்கு பனியைக் குவிக்கக் கூடும்'' என்று செய்தித்தாள் அறிவித்தது. 92. சகோ.டாம்-சிம்ப்ஸன் இன்றிரவு இங்கு எங்கோ உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அவர் இங்கு இருக்க வேண்டும். அவர் கனடாவிலிருந்து நெடுஞ்சாலை வழியாக பிரயாணப்பட்டு வரும் போது, ''கொலராடோவைத் தவிர்த்து வேறு பாதையில் செல்லுங்கள்-! பெரிய உறைபனி வருகிறது'' என்று அறிவிக்கப்பட்டது. சகோ.சிம்ப்ஸன், இங்கிருக்கிறீர்களா-? எங்கே-? ஆம், பின்னால் அமர்ந்திருக்கிறார். அவர்கள் கொலராடோவைத் தவிர்க்க அவரிடம் கூறினார்கள், ஒரு பெரிய உறை பனி வரவிருப்பதால்-! 93. எனவே நான் சகோதரியிடம்- -வேறொருவரின் மனைவியிடம், சகோ. ஈவான்ஸின் மனைவி. சகோ.ஈவான்ஸ் இன்றிரவு இங்கில்லை என்று நினைக்கிறேன். சகோ.ஈவான்ஸ், இங்கிருக்கிறீர்களா? அவர் இன்னும் இங்கு வந்து சேரவில்லையென்று நினைக்கிறேன். அவர் கன்வென்ஷனுக்கு வந்து சேருவார். எனவே நான் அவருடைய மனைவியை தொலைபேசியில் அழைத்து, “என் மனைவியுடன் தொலைபேசியில் பேசமுடியவில்லை. அவள் கடைக்குப் போயிருக்கிறாள். முழு சுவிசேஷ வர்த்தகர் குழுவின் பிரதிநிதி-யாகிய சகோ.டோனி-ஸ்ட்ரோமியிடம், இந்த ஞாயிறு என்னால் வரமுடிய-வில்லை என்றால், வேறொரு பேச்சாளரை ஏற்பாடு செய்யும்படி கூற வேண்டுமென்று என் மனைவியிடம் கூறுங்கள். நான் இங்கிருந்து புறப்பட்டு வரவே முடியாதென்று நினைக்கிறேன். நான் இவர்களுடன் இருக்கிறேன்'' என்றேன். 94. என்ன நடந்தது-? அன்றிரவு பனி பெய்யவில்லை. அடுத்த நாள் காலையில் மேகங்கள் தாழ்வாகவும் கொடூரமாகவும் காணப்பட்டன. நான், 'சகோதரரே, அநேக ஆண்டுகளாக இங்கு நான் மாடு மேய்த்திருக்கிறேன், வழி காட்டியாகவும் இருந்திருக்கிறேன். முதல் துளி மழை பெய்தவுடன். நீங்கள் துரிதமாக முகாமுக்குச் சென்று விடுங்கள். ஏனெனில் பதினைந்தே நிமிடங்-களுக்குள், உங்கள் கையை உங்களுக்கு முன்னால் வைத்தால், இரண்டு மூன்று நாட்களுக்கு அதை காணமுடியாத அளவுக்கு பயங்கரமான உறைபனி இங்கு பெய்வதைக் கண்டிருக்கிறேன்" என்றேன். நாங்கள் 9000 அடி உயரத்தில் இருந்தோம். நான், 'நீங்கள் உறைபனியில் மாட்டிக் கொண்டு வழி தவறி விடுவீர்கள். நீங்கள் மலையின் மேலேயே மரிக்க வேண்டியிருக்கும்" என்றேன். நான் ஒவ்வொருவரையும் கணக்கெடுத்து மேலே சென்றேன். நான், "எனக்கு காத்திருக்க வேண்டாம். அந்த முதல் துளி மழை தூறினவுடனே, முகாமுக்கு லிரைந்து செல்லுங்கள். இல்லையென்றால் முகாமுக்குப் போகும் வழியை உங்களால் கண்டு பிடிக்க முடியாது'' என்றேன். அவர்களும் ஒத்துக் கொண்டனர். 95. நான் மேலேறி சென்றேன். ஓ-நாய்கள் எங்கும் ஊளையிட்டுக் கொண்டு இருந்தன. வான் நிலை மாறப்போகிறது என்று அறிந்து கொண்டேன். அப்பொழுது சடுதியாக பலத்த காற்று அடிக்கத் தொடங்கினது. உறைபனி கலந்து மழை விழத்தொடங்கினது. “எல்லோரும் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்'' என்று எண்ணினேன். நான், நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன். “நான் திரும்பி செல்லும் மூன்பு, நான் சுட்ட அந்த மானைக் கண்டால் நலமாயிருக்கும். பனி அதை மூடி விடும், பின்பு வசந்த காலம் வரைக்கும் அதை கண்டு பிடிக்க முடியாது" என்று நினைத்தேன். நான் அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த மானை வேட்டையாடினேன். இந்த சிறு துப்பாக்கி எனக்கு சொந்தமான முதற்கு, இப்படி மானை விட்டு விடுவது இதுவே முதல் தடவையாகும். அப்படி விட்டு விடுவது எனக்குப் பிடிக்கவில்லை'' என்று எண்ணினேன். 96. சிறிது நேரத்துக்கெல்லாம் பெரிய பனித்துளிகள் எங்கும் விழத் தொடங்கின, காற்று பலமாக அடிக்கத் தொடகினது. உச்சிக்கு என்னால் எப்படி ஏறிச் செல்ல முடியுமென்று எனக்குத் தெரியவில்லை. அந்த முகடு மேல் எப்படி தங்கியிருப்பதென்று எனக்குத் தெரியும். நான் கீழே சென்று குறுகிய சமவெளியை அடைந்தால் அதன் வழியாகச் சென்று ஒரு சிறு நடை பாலத்தை சேரலாம், அங்கிருந்து கூடாரம் இருக்கும் இடத்திற்கு எப்படி- யாவது சென்று விட முடியும். அங்கிருந்து வெளியேற அந்த ஒரு வழி மாத்திரமேயுள்ளது. எனவே, “இப்படியும் அப்படியும் நகர்ந்தால், அவ்வளவு தான். அதன் பிறகு காணப்படமாட்டோம். அங்கேயே மரித்து விடுவோம்'' என்று எண்ணினேன். 97. நான் மலையிலிருந்து கீழே இறங்கத் தொடங்கினேன். நான் இருந்த இடத்திலிருந்து முன்னூறு அல்லது நானூறு கெஜம் கீழே இறங்கியிருப்பேன். இது விசித்திரமாகத் தென்படலாம். ஆனால் எனக்கு முன்னால் வேதாகமம் உள்ளது. நான் கூறுவதற்கு பரலோகப் பிதா சாட்சி. நான் அங்கிருந்து வெளியேற எண்ணி ஓடினேன். காற்று பலமாக அடித்து, எனக்கு முன்னால் இருபது அடி தூரம் வரைக்கும் இருந்த மரங்களை சுழற்றினது. அப்பொழுது ஒரு சத்தம் “நில்! நீ புறப்பட்ட இடத்திற்கு திரும்பிப்போ '' என்றது. 98. நான் நின்றேன். ''அது காற்றின் சத்தமாக இருக்கலாம்'' என்று எண்ணினேன், நான் அப்படி எதையும் என் மனதில் நினைக்கவும் கூட இல்லை. நான் சற்று நேரம் காத்திருந்தேன். பையன்களில் ஒருவன் எனக்கு 'சான்ட்விச்' செய்து கொடுத்திருந்தான். அதை வெளியே எடுத்தேன். அது 'சான்ட்விச்' மாதிரியே இல்லை. நான்... மழை பெய்து, வியர்த்து, அது ஒரு ரொட்டி உருண்டையாக, எங்கோ ஒரு மூலையில் சிறிது இறைச்சி இருந்தது. எனக்கு பசியெடுத்தது. அதை எப்படியோ சாப்பிட்டேன். அங்கு நான் நின்று, 'சான்ட்விச்' சுற்றியிருந்த காகிதத்தை புதைத்தேன்... ஜன நடமாட்டத்தைக் காணும் போது, மிருகங்கள் ஓடி வந்து அதை எடுத்துக் கொண்டு போய்விடும், நான் சற்று நேரம் நின்று விட்டு பிறகு, "சரி, நான் போவேன்'' என்று நினைத்தேன். 99. நான் புறப்பட்டு சென்றேன். என் சத்தத்தை நீங்கள் எவ்வளவு தெளிவாக கேட்கின்றீர்களோ, அவ்வளவு தெளிவாக ஒரு சத்தம் என்னிடம், "நீ புறப்பட்டு வந்த இடத்திற்குத் திரும்பிச் செல்' என்றது. நான் மரணக் கண்ணிக்குள் நடக்க வேண்டுமென்று தேவன் கூறுவாரா என்ன-? என்று வியந்தேன். 100. நான் ஒரு நிமிடம் அங்கு நின்றேன், அதே சத்தம் தான் என்னிடம் அணில்களைக் குறித்து கூறினது. நான் நேற்று உங்களிடம் கூறின அந்த சம்பவம், என் மனைவியைக் குறித்தும். அது ஒரு சத்தம், ஒரு மனித சத்தம். நான் சிறுவனாயிருந்தபோது, அதே சத்தம் தான் என்னிடம், “மது அருந்தாதே, புகைபிடிக்காதே, இவை கடைசி நாட்களில் சம்பவிக்கும்'' என்று கூறினது. தேவன்... இந்த வேதாகமத்தை என் இருதயத்தின் மேல் வைத்து கூறுகிறேன் உங்களிடம் பொய்யுரைத்து என் ஆத்துமாவை நான் நரகத்துக்கு அனுப்புவ-தனால் எனக்கு என்ன பயன்-? அது உண்மை. அது வழக்கத்திற்கு மாறான ஒன்று, ஆனால் அது உண்மை , 101. "நல்லது, நான் அந்த சத்தத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும்'' என்று நினைத்தேன், நான் ஏன்..." நான் அங்கு செல்வதற்கு தேவனுக்கு ஒரு காரணம் இருக்கவேண்டும், ஒருக்கால் நான் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டிய வேளை வந்திருக்கலாம்," என்று நினைத்தேன். எனவே நான் காட்டில் நடந்து, 300 அல்லது 400 கெஜம் மேலே சென்று, மறுபடிமாக அந்த முகடை அடைந்தேன், அங்கு உறைபனி அடர்த்தியாகப் பெய்திருந்தது. என்னால் ஒன்றுமே காணமுடியவில்லை. காற்று பலமாக அடித்து மரங்களை சுழற்றிக் கொண்டிருந்தது... நான் என் துப்பாக்கியை கையிலெடுத்து (நான் சிகப்பு 'ஷர்ட்'டையும், சிகப்பு தொப்பியையும் அணிந்திருந்தேன்) துப்பாக்கியில் இணைக்கப்பட்டுள்ள தூரப்பார்வை கண்ணாடியின் மங்கலை துடைத்து சுத்தம் செய்தேன். ஏனெனில் அப்படிப்பட்ட சமயங்களில் கரடிகளும், சிங்கங்களும் நடமாடும். அவைகளில் ஏதாவதொன்றக் காண நேர்ந்தால், தூரப்பார்வை கண்ணாடி மங்கலாயிருக்கக்கூடாது. அதை நான் இப்படி பிடித்துக்கொண்டு, அதன் மேல், பனி பெய்யாதபடி பார்த்துக் கொண்டேன். நான் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்தேன். 102. நான் அங்கு உட்கார்ந்து கொண்டு, “என்னை ஏன் அவர் மேலே வரச் சொல்ல வேண்டும்-? மீண்டும் என்னால் கீழே போக முடியாதென்று நினைக்கிறேன். அது மோசமாகிக் கொண்டு வருகிறது'' என்று நினைத்தேன், எனக்கு முன்னால் 10 அல்லது 15 அடி தூரம் தான் காணமுடிந்தது, சில சமயங்களில் 5-அடி தூரம் கூட காணமுடியவில்லை. அது அதிகமாகிக் கொண்டே வந்தது. “அவர்: திரும்பிப் போ என்றார். நான் இங்கு உட்கார்ந்து இருப்பேன்'' என்று நினைத்தேன். பனி தரையில் ஒன்றரை அல்லது இரண்டு அங்குலம் கனத்திற்குப் பெய்திருந்தது. அது இருபது, முப்பது நிமிடங்கள் பெய்திருக்கும். காற்று பலமாக அடித்து அதையும் சிதறடிக்கத் தொடங்கினது. நான் சற்று நேரம் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். 103. அப்பொழுது ஒரு சத்தம் கேட்டது. அது, “நான் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த பரலோகத்தின் தேவன்,'' என்றது. 104. நான் தொப்பியைக் கழற்றி விட்டு, அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். நான் மறுபடியும் கவனித்தேன். “அது காற்றல்லவே' என்று நினைத்தேன். ஓ, அது பலமாக அடித்து சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது. 105. நான் மறுபடியுமாக அந்த சத்தத்தைக் கேட்டேன். அது “நானே கொந்தளிக்கும் கடலை அமரப் பண்ணினவர், நானே சிருஷ்டி கர்த்தர். உன் முன்னிலையில் அணில்களை சிருஷ்த்தவர் நானே. இவைகளைச் செய்தேன்'' என்றது. 106. நான், ''ஆம், ஆண்டவரே, உம்மை விசுவாசிக்கிறேன்,'' என்றேன். அவர், “எழுந்து நில்!'' என்றார். நான் எழுந்து நின்றேன். அவர், 'இப்பொழுது புயல் காற்றைக் கட்டளையிடு. நீ கட்டளை இடுவதை நான் நிறைவேற்றுவேன்'' என்றார். 107. நான் கூறுவது உண்மை. உங்களை நியாயத் தீர்ப்பிலே சந்திக்கும் போது, இதற்கு நான் பதில் கூறவேண்டியவனாயிருப்பேன். அவர்,.. நான், ''புயலே, உன் இடத்திற்குப் போ; சூரியனே நில், நீ வழக்கம் போல் நான்கு நாட்கள் பிரகாசி'' என்று கட்டளையிட்டேன். நான் கட்டளையிட்ட மாத்திரத்தில், என்னைக் கீழே தள்ள நோக்கிய உறைபனியும், கல்மழையும் நின்று விட்டது-! ஓரிரு நொடிகளில் சூரியன் பிரகாசித்து, என் மேல் கதிர்களை வீசியது நான் மலைகளை நோக்கின போது, கீழ்காற்று அடிப்பதை என்னால் காணமுடிந்தது (அது மேற்கிலிருந்து வந்தது). அது இவ்வழியாக வந்து, அதிசய விதமாக மேகங்கள் மறைந்து போவதைக் கண்டேன்... அவை எங்கு சென்றனவோ நான் அறியேன், அங்கு நான் சில நொடிகள் நின்று கண்ணீர் சிந்தினேன். அது நரைத்த என் தாடியின் வழியாய் வழிந்தோடியது. நான், “தேவனே, எப்படி, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை,'' என்று எண்ணினேன். ''சகோதரர் அனைவரும் முகாமை அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்,'' என்று மனதில் எண்ணினேன், சூரியன் எல்லா விடங்களிலும் பிரகாசித்தது. 108. நான் மலையிலிருந்து இறங்கி வரத் தொடங்கினேன். சூரிய வெப்பத்தி-னால் பனி உலரத் தொடங்கினது. என் 'ஷர்டிலிருந்து ஆவி வந்தது. இரண்டு, மூன்று வினாடிகள் தான் இருக்கும். நான் மலையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சத்தம், "என்னுடன் கூட நடப்பாயா-?'' என்றது. 109. நான், “ஆண்டவரே, எனக்கு கிடைக்கக் கூடிய மிகப்பெரிய பாக்கியம் அதுவே,'' என்றேன். நான் மான்கள் வேட்டையாடும் வழியாகச் சென்று காடுகளை அடைந்து, அதன் வழியாக நடந்து சென்றேன். "நான் இப்படியாக நடந்து, எப்பொழுதும் என் மனைவி மேடாவை வாழ்த்தும் அந்த இடத்தை அடைவேன்,'' என்று எண்ணினேன். நான் அரைமணி அல்லது முக்கால் மணி நேரம் நடந்திருப்பேன். அதற்குள் பனி முழுவதுமாக உலர்ந்து மறைந்து விட்டது. "மேடா ஏன் நான் கூட வருவதைக் குறித்து ஒன்றும் கூறவில்லை-?'' என்று வியந்தேன். எங்களுக்கு விவாகமாகி நாங்கள் அங்கு சென்றிருந்த போது, மரக்கட்டைகளை அவள் கடக்க முடியாமல் நான் அவளைத் தூக்கிச் சென்றது என் நினைவுக்கு வந்தது. இப்பொழுது அவளுக்கு தலை நரைத்து விட்டது. என். முகத்திலும் கறுப்பும், நரை மயிரும் கலந்த தாடி உள்ளது. நான், 'பில்லி, உனக்கு இன்னும் அதிக காலம் இல்லை, உனக்கு வயது ஆகின்றது'' என்று நினைத்துக் கொண்டேன். 110. நான் கீழே சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது நான் உயரே நோக்கினேன். மேடா கரங்களை விரித்தவளாய், கறுத்த கூந்தலை உடையவளாய் என் முன் நின்றதை என்னால் கற்பனை செய்ய முடிந்தது. நான் தலையைத் தாழ்த்தினேன். நான் சலசலக்கும் மரங்கள் உள்ள அந்த சிறு இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அங்கு ஒரு சிறு வளைவு இருந்தது... ஒரு மரக்கிளையின் மேல் இப்படி என் தலையை சாய்த்து அழத் தொடங்கினேன். அப்பொழுது 'பட், பட், பட்' என்னும் ஓசை கேட்டது. நான் கீழே பார்த்த போது, என் கண்ணீர் தாடியின் வழியாக ஓடி, உலர்ந்த இலைகளின் மேல் விழுந்து கொண்டிருந்தது. முப்பது நிமிடங்களுக்கு முன்பு தான் அங்கு ஒரு அங்குலம் கனமுள்ள பனி இருந்தது, உறைபனி பெய்துக் கொண்டிருந்தது. 111. நான் மலையை விட்டு இறங்கி வந்த பின்பு நான்கு நாட்கள் வரை, வானத்தில் ஒரு மேகம் கூட காணப்படவில்லை. நான் பெட்ரோல் விற்பவரிடம், "மிகவும் உலர்ந்துள்ளதல்லவா-?'' என்றேன். 112. அவர், "ஒரு விசித்திரமான காரியம் உங்களுக்குத் தெரியுமா-? புயல் வருமென்று அன்று முன்னறிவிக்கப்பட்டது. அது வந்தது, திடீரென்று நின்று விட்டது'' என்றார். 113. நான் அரிசோனாவுக்கு திரும்பும் வழியில், நியூ-மெக்ஸிகோவை அடைந்தேன். என் மகன் பில்லியிடம், "அங்கு சென்று இங்கு புயல் அடித்ததா என்று கேட்கலாம்'' என்றேன். ஒரு ஞாயிறு காலையன்று அங்கு காரை நிறுத்தி பெட்ரோல் நிறைத்தேன். அந்த மனிதன், "வேட்டைக்குப் போய் வருகின்றீர்களா?'' என்று கேட்டார். நான், “ஆம் ''ஐயா'' என்றேன். அவர். “அதிர்ஷ்டம் ஏதாகிலும் இருந்ததா?'' என்றார். 114. நான், “ஆம், ஐயா. எங்களுக்கு அருமையான தருணம் உண்டாகி இருந்தது'' என்று கூறி விட்டு, “இங்கு உலர்ந்து காணப்படுகிறதே'' என்றேன். அவர், “ஆம், இங்கு பயங்கரமாக உலர்ந்துள்ளது, அன்றொரு நாள் பெரிய பனி வரப்போகிறது என்று எங்களுக்கு வாக்களிக்கப்பட்டது. உறைபனி உண்மை-யில் பெய்யத் தொடங்கினது. ஆனால் எப்படியோ அது மறைந்து விட்டது" என்றார். ஓ, என்னே-! 115. (முடிக்கும் தருணத்தில்); நான் மரத்தின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தேன், என் கண்களிலிருந்து கண்ணீர் விழுந்தது. நான் இவ்வாறு யோசித்தேன்: தேவன்...சற்று யோசித்து பாருங்கள், கொந்தளிக்கும் கடலை,' அமைதியாயிரு' என்று தேவன் அதட்டின போது, காற்று அவருக்குக் கீழ்ப் படிந்தது. அதே இயேசு எங்களுடன் காட்டில் இருந்தார். அவர் இப்பொழுதும் வார்த்தையாய் இருக்கிறார். வார்த்தை... இயற்கை அனைத்துமே அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிய வேண்டும். ஏனெனில் அவர் இயற்கையை சிருஷ்டித்தவர். அங்கு நான் நின்று கொண்டிருந்த போது, கண்ணீர் கன்னங்களின் வழியாக வழிந்தோடியது. 116. இப்பொழுது ஐந்தாண்டு காலமாக நான் சுவிசேஷ ஊழியத்திற்கு செல்லவில்லை. நான் சபைகளுக்குச் சென்று, என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். உங்கள் எல்லோருக்கும் அது தெரியும். என் இருதயம் பாரமாய் இருந்தது. நான் வெளியே செல்வேன், அரிசோனாவுக்கு வருவேன். அவர் என்னிடம் சில காரியங்களைச் செய்யும்படி கூறுவார், நான் சென்று அவைகளைச் செய்வேன். எழுப்புதல் முடிந்து விட்டது போல் தோன்றினது. என்ன நடக்கிறதென்று நான் வியக்காமல் இருக்க முடியவில்லை. என் இருதயத்தில் நான் மனஸ்தாபப்பட்டு, "ஆண்டவரே, நான் தவறு ஏதாகிலும் செய்திருந்தால், எனக்குத் தெரியப்படுத்தும்; நான் சரி செய்து கொள்கிறேன்'' என்று கூறுவேன். எப்பொழுதும் இருதயம் பாரமாயிருந்தது, ஒரு பயங்கர-மான உணர்ச்சி. நான் விரும்பின வெற்றி எனக்குக் கிடைக்கவில்லை. அவர் அநேக, மகத்தான காரியங்களைச் செய்தும் காண்பித்தும் இருக்கிறார். அதற்கு நீங்கள் எல்லோரும் சாட்சிகள். நான் இங்கு வந்து அவைகளை உங்களிடம் எடுத்துரைக்கிறேன். இயற்கைக்கு மேம்பட்ட மகத்தான செயல்கள் நிகழ்ந்த-தையும் ஜனங்கள் கண்டதையும் செய்தித் தாள்களும், பத்திரிகைகளும் வெளியிட்டன. 117. ஆயினும் என் இருதயம் அப்பொழுதும் பாரமாயிருந்தது. நான் புதரின் மேல் இப்படி சாய்ந்து கொண்டு, “மகத்தான பரலோகத்தின் தேவனே, சூரிய வெப்பம் என் மேல்படுகின்றது, எங்கும் ஒரு மேகம் கூட காணப்படவில்லை. சில நிமிடங்களுக்கு முன்பு தான் நீர், மனிதனின் வார்த்தையை பொய்யாக்கினீர், இயற்கை கீழ்படிந்தது. ஆண்டவரே, அது எப்படி முடியும்-? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய வார்த்தையைத் தான் நான் பேசும்படி செய்தீர். பிதாவே, நான் எவ்வளவு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்!'' என்று நினைத்தேன். 118. அப்பொழுது. "பூம், பூம்'' என்னும் ஓசை கேட்டது (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தைக் குத்தி ஓசை எழுப்புகிறார்-ஆசி). நான் பார்த்த போது, எனக்கு முன்னால் இரண்டு, இல்லை, மூன்று மான்கள் நின்று கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தன. அதற்கு முந்தின வாரம் தான் அநேக மான்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. வேட்டைக்காரர்கள் அங்கு சென்றிருந்தனர். நானும் சிகப்பு உடை அணிந்திருந்தேன். அத்நிலையில் அவை இவ்வளவு வேகமாக ஓடி விடும் (சகோ. பிரான்ஹாம் விரல்களை சொடுக்குகிறார்-ஆசி). ஆனால் அவை என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன. புசிப்பதற்கு அவைகளைக் காட்டிலும் நல்ல மான்கள் இருக்க முடியாது. அவை ஒரு பெண் மானும், முழுவதும் வளர்ந்த இரு மான் குட்டிகளும். ''அவை சரியானவை, நமக்கு மூன்று மான்கள் தேவை" என்று எண்ணினேன். 119. ஏதோ ஒன்று என்னிடம், “கர்த்தர் அவைகளை உன் கரங்களில் தந்து இருக்கிறார்'' என்றது. ஒரு ஆண்டுக்கு முன்பு, நான் முழு சுவிசேஷ வர்த்தகர் குழுவைச் சார்ந்த சகோ,க்ளேய்டனுடன் இருந்த போது, அவர் எங்களுடன் வந்திருந்தார். அப்பொழுது தான் நான் அந்த பெரிய மீனைப் பிடித்து, சாதனையை ஏற்படுத்தினேன். அந்த ஆண்டு நான் மற்ற மனிதர்களுக்காக 19-கடம்பை மான்களைக் கொன்றேன். 120. சில நேரங்களில் இந்த வர்த்தகக் குழு அங்கத்தினர்கள், என் சகோதரரே, இதைக் கூறுவதால் மன்னிக்கவும். அவர் களில் சிலர் மருத்துவர்கள், அதிக பருமன் உள்ளவர்கள். அவர்களால் நடக்க முடியாது. அவர்கள் அலுவல-கத்தில் உட்கார்ந்து கொண்டே, "பில்லி, ஒன்றிரண்டு வயதான மானை எனக்கு வேட்டையாடிக் கொண்டு வாரும்," "எனக்கு ஆண் மான் வேண்டும்,'' "எனக்கு ஒரு நீலப் பசுவை வேட்டையாடிக் கொண்டு வாரும்'' என்றெல்லாம் கேட்பது வழக்கம். 121. இப்படியாக அவர்களுடைய விருப்பத்திற்கிணங்கி நான் கடம்பை மான்களையும் மற்றவைகளையும் சுட்டு வீழ்த்தி, அவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், நான் அப்படி செய்யக் கூடாதென்று கர்த்தர் கட்டளையிட்டார். கொலராடோவில் பெய்த உறைபனியின் போது இப்பொழுதல்ல, அநேக ஆண்டுகளுக்கு முன்பு,'' ஆண்டவரே, நான் மனிதரை வேட்டைக்குச் கூட்டிச் செல்வேன், ஆனால் மனிதனுக்கு வேட்டையைக் கொன்று தரமாட்டேன்'' என்று வாக்களித்தேன். அது மிகவும் அவசரமாக தேவையாய் இருந்தாலொழிய, அப்படி செய்வதில்லை. 122. பையன்களே, உங்களுக்கு நினைவிருக்கிறதா-? நாம் வேட்டைக்கு புறப்படுவதற்கு முந்தின இரவு, அந்த வயோதிப சகோதரனுக்கு மான் இறைச்சி இல்லை (அவர் பெயர் என்ன? பாமர்) அவர் வந்து என் கையில் பத்து டாலர் நோட்டு ஒன்றைத் திணித்து, ''சகோ. பிரான்ஹாமே, இது என் தசம பாகம். சபைக்கு கொடுத்து விடுங்கள்,'' என்று கூறி விட்டு. “எனக்கு ஒரு மானை வேட்டையாடிக் கொண்டு வருவீர்களா?'' என்று கேட்டார். 123. ஓ! நான் (ஒலி நாடாவில் காலி இடம்-ஆசி).. மூன்று மான்கள் நின்று கொண்டிருந்தன. என் துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டிருந்தேன். நான் தோளை இப்படி சரித்தேன். “அவை என்னை விட்டு ஓடி போய் விட முடியாது அவை இங்கேயே நிற்கின்றன, நான் துப்பாக்கியால் துரிதமாகச் சுடுபவன். அவை திரும்பி ஓடி விடுவதற்கு முன்பு, மூன்றையும் சுட்டு வீழ்த்தி விடுவேன்" என்று நினைத்தேன். பாருங்கள்-? என்னிடம் துப்பாக்கி இருந்தது. நான் தோளைச் சரித்து துப்பாக்கியை எடுத்த போது, நான் தேவனுக்களித்த வாக்கு என் நினைவுக்கு வந்தது. “நான் சுட முடியாது, நான் சுடமுடியாது" என்றேன். ஒரு முறை யோவாப், தாவீதிடம், “கர்த்தர், சவுலை உம் கைகளில் கொடுத்திருக்கிறார்'' என்று கூறினது என் நினைவுக்கு வந்தது. தாவீது, “தேவன் அபிஷேகம் பண்ணின வரை நான் தொடாது இருப்பேனாக'' என்றான். 124. நான் அப்படி செய்ய மாட்டேன் என்று தேவனுக்கு வாக்களித்தேன். நான், "அவை மலையுச்சியில் உள்ளன. அவைகளைச் சுட்ட பின்பு, மலையிலிருந்து உருட்டி விட்டு சுலபமாக எடுத்துக் கொள்ளலாம்'' என்று நினைத்தேன். மூன்று அருமையான மான்கள் அங்கு நின்று கொண்டிருந்தன, நான், “இல்லை, நான் செய்யவே மாட்டேன்'' என்றேன், அங்கு முழுவதும் வளர்ந்த இரு மான் குட்டிகள். ஆண் ஒன்றும், பெண் ஒன்றும் தாய் மானுடன் நடந்து வந்து, சுற்றும் முற்றும் பார்க்கின்றன; நல்ல கொழுத்த மான்கள். 125. நான் அங்கு சற்று நேரம் நின்று, "நான் சிகப்பு உடையை உடுத்தி இருக்கும் போது, இந்த மான்களின் செயல் வழக்கத்திற்கு மாறானது,'' என்று நினைத்தேன். அவைகளை பயமுறுத்தலாம் என்று எண்ணினேன். நான் மான்களிடம், "நீங்கள் என் கைகளில் இருக்கின்றீர்கள். உங்களால் தப்பி ஓட முடியாது. ஆனால் நான் உங்களுக்கு தீங்கிழைக்கப் போவதில்லை. போய் விடுங்கள்,'' என்றேன். அவை ஒன்றையொன்று பார்த்து என்னை நோக்கி வந்து, முடிவில் எனக்கு மிக அருகாமையில் வந்து விட்டன. அவை என்னை முறைத்துப் பார்த்தன... நான் துப்பாக்கியை தரையிலே வைத்து விட்டு, “தாயே, உன் குட்டிகளைக் கூட்டிக் கொண்டு காட்டுக்குள் சென்று விடு. நான் இங்கு தேவனுடைய சமுகத்தில் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். மற்றவர்க-ளுக்காக நான் வேட்டையாடி கொல்ல மாட்டேன் என்று தேவனுக்கு உறுதி அளித்திருக்கிறேன். இப்பொழுது உன் குட்டிகளை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்று விடு. எனக்கும் காடு என்றால் பிரியம். போய் விடு," என்றேன். 126. தாய் மான் என்னை உற்று நோக்கியது. பின்பு மூன்றும் சுற்று முற்றும் பார்த்து விட்டு, நடந்து சென்று, மறுபடியும் வந்தன. "உங்களுக்கு தீங்கிழைக்க மாட்டேன். காட்டுக்குள் சென்று விடுங்கள். நீங்கள் என் கைகளில் இருக்கின்றீர்கள். உங்களால் தப்பிக்க முடியாது. தேவனுடைய கரங்களில் இருந்து நானும் தப்பிக்க முடியவில்லை. ஆனால் அவர் என்னை விட்டு விட்டார். நான் அவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். உங்ககளை நான் விட்டு விடுகிறேன். போய் விடுங்கள். சந்தோஷமாயிருங்கள். காட்டை அனுபவியுங்கள், எனக்கும் அது பிரியம். போய் விடுங்கள்,'' என்றேன். 127. அவை என் கைகளில் இருப்பதை தின்னும் அளவுக்கு அருகில் வந்து, திரும்பி சென்று, என்னை இப்படி பார்த்துக் கொண்டே நடத்து, காட்டுக்குள் சென்று விட்டன. நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். "ஒரு மானுக்கு அது வழக்கத்துக்கு மாறான செயல். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமுகம் இங்கிருந்ததால் அப்படி செய்ததோ-?" என்று வியந்தேன். அப்பொழுது ஒரு சத்தம் என்னிடம், 'உன் வாக்கை நினைவு கூர்ந்தாய் அல்லவா-?'' என்றது. அது அவர் என்று நான் அறிந்திருந்தேன். நான், ஆம், ஆண்டவரே,'' என்றேன். 128. அவர், ''அவ்வாறே நானும் என் வாக்கை நினைவு கூருவேன். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை'' என்றார். 129. அப்பொழுது அந்த பாரம் என்னை விட்டு நீங்கினது. கிறிஸ்தவ நண்பனே, அது மறுபடியும் வரவில்லை. அது சென்ற அக்டோபர் மாதம் நிகழ்ந்தது. இப்பொழுது நான் வித்தியாசமான ஆளாயிருக்கிறேன். நீங்கள் தேவனிடம் செய்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுங்கள். நீங்கள் தேவனிடம் எதை கூறினாலும், அதை விசுவாசியுங்கள், அவருடைய வார்த்தைக்கு முரணாய் உள்ள அனைத்தினின்றும் பிரிந்து வாருங்கள். அப்பொழுது தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்டு பதிலளிப்பார். இப்பொழுது சற்று நேரம் தலை வணங்குவோம்: 130. இன்றிரவு நீங்கள் எல்லா அவிசுவாசத்தினின்றும் உங்களை வேறு பிரித்துக் கொண்டு, கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுக்க சித்தமாய் இருக்கிறீர்களா-? அப்படி நீங்கள் செய்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசிப்பீர்களானால் (அவர் செய்வதாக வாக்களித்ததை அவர் செய்து நிறைவேற்றுவதை நாம் காண்கிறோம்), உங்கள் கரங்களையுயர்த்தி, ''தேவனே, இன்றிரவு உமக்கு வாக்களிக்கிறேன். ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். இனி ஒரு போதும் சந்தேகப்பட மாட்டேன்'' என்று கூறுவீர்களா-? 131. எங்கள் பரலோகப் பிதாவே, இந்த வரலாறு உண்மை என்று உமக்குத் தெரியும். இது நான்காம் முறை. ஐந்தாம் முறை என் அருமையான மனைவிக்கு நீர் கூறின விதமாகவே... சென்ற வாரம் அந்த டாக்டர் எழுதிக் கொடுத்தார்... ஆனால் அந்த பெரிய கட்டி (tumor) அவர் அவளைத் தொடும் முன்பே, நீர் கூறினபடியே மறைந்து போனது. 132. இப்பொழுதும் பிதாவே, இந்த ஜனங்களுக்கு உதவி செய்யவேண்டுமாய் ஜெபிக்கிறேன். எனக்கு வயதாகின்றது என்று உணருகிறேன். நான் விரைவில் செல்ல வேண்டுமென்று எனக்குத் தெரியும். ஆண்டவரே, நான் வேண்டிக் கொள்கிறேன்... நான் என் சகோதரரிடம் உத்தமமும் நேர்மையுமாய் இருப்பேனாக! ஜனங்களிடம் நான் உத்தமமும் நேர்மையுமாய் இருப்பேனாக-! அவர்களிடம் அவ்வாறு இல்லையென்றால் உம்மிடம் அவ்வாறு இருக்க முடியாது. ஆண்டவரே, என்னைக் குறித்து நீர் எழுதி வைத்துள்ள சாட்சியை நான் கேட்க விரும்புகிறேன். 133. இன்றிரவு வார்த்தை எங்களில் அதிகமாக வாழும்படி செய்து, எங்கள் அனைவருக்கும் விசுவாசத்தை அருளுமாறு ஜெபிக்கிறேன். இந்த சிறு வரத்தின் மூலம்... வரம் என்பது நீர் ஒருவருடைய கைகளில் அளித்து, அவர்கள் அதை உபயோகித்து முன் செல்வதாக ஜனங்கள் சில சமயங்களில் நினைக்கின்றனர். பிதவே, வரம் என்பது அதுவல்ல, அது வழியை விட்டு விலகி நின்று, பரிசுத்தாவியானவர் தாம் விரும்புவதைச் செய்ய விட்டுக் கொடுப்பதே என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக! 134. ஆண்டவரே, நாங்கள் வழியை விட்டு விலகி நிற்போமாக-! அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் மூலம் கிரியை செய்வாராக-! இன்றிரவு நாங்கள் இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தங்கள் நிறைவேறு-வதைக் காணட்டும். முக்கியமாக ஆண்டவரே, இன்றிரவு நான் குறிப்பிட்ட வாக்குத்தத்தம், 'தேவன் ஆபிரகாமுக்கு முன்னால் மாம்சத்தில் வெளிப் பட்டு, இருதயத்தின் இரகசியத்தை அறிந்து கொள்ளுதல், அது தேவன், அவர் மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணின போதும், அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிந்து கொண்டார். தேவனுடைய வார்த்தை-யானது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறது என்று வேதம் கூறுகிறது. இதன் மூலமாகவே அவர், தேவனென்று சீஷர்கள் அறிந்து கொண்டனர். இப்பொழுதும் பிதாவே, இன்றிரவு நீர் வந்து, எங்கள் எளிய, தாழ்மையுள்ள ஆலயங்கள் உமக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு, நீர் இன்னமும் வார்த்தையாய் இருக்கிறீர் என்று உமது ஆவியானவர் எங்களை விசுவாசிக்கும்படி செய்வாராக-! 'அப்பொழுது நாங்கள் எல்லா அவிசுவாசத்-தினின்றும் எங்களைப் பிரித்துக் கொண்டு உம்மைப் பின்பற்றுவோம், இயேசுவின் நாமத்தில், எங்களுடன் பேசுவீராக-! ஆமென். (சபையிலுள்ள ஒருவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்- ஆசி) மகத்தான பரலோகத்தின் தேவனே, எங்கள் மேல் கிருபையாயிரும். ஓ, ஆண்டவரே, உமது கட்டளைகளுக்குக் கீழ்படிய எங்களுக்கு உதவி செய்யும், உமது கனத்திற்கென்று எங்களை உபயோகப்படுத்தும். உற்சாகமான இந்த வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் மத்தியில் அசைவாடி, இந்த வார்த்தைகளை உறுதிப்படுத்துவாராக-! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 135. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், சந்தேகப்படாதீர்கள், தைரியமாய் இருங்கள். அவருடைய வருகையின் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 136. இன்றிரவு ஜெப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. எத்தனை பேரிடம் ஜெப அட்டைகள் உள்ளன-? கைகளை உயர்த்துங்கள். கர்த்தர் சிந்தனைகளைப் பகுத்தறிதலை அருளுவாரென்றால், அத்தனை பேருக்கும் அப்படி செய்வதென்பது கடினமாயிருக்கும். ஆனால் சற்று நேரம் எடுத்துக் கொண்டு இதை கூற விரும்புகிறேன், எத்தனை பேரிடம் ஜெப அட்டைகள் இல்லாமலிருந்து, தேவன் உங்களை சுகமாக்கவேண்டுமென்று ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள்? 137. தேவனாகிய கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக-! நான் உங்கள் சகோதரன். இயேசு உங்கள் இரட்சகர். தேவன் நம்முடைய பிதா, நாம் ஜனங்கள். நாம் மறுபடியும் பிறக்கும் போது, இவ்வுலகத்தாரல்லாதவராகி விடுகின்றோம். நாம் பரத்திலிருந்து வந்தவர்கள். வியாதியஸ்தர்களுக்கு ஜெபிப்பதற்காக ஜெப வரிசையை தொடங்கும் முன்னே, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும் ஒருவர் மேடையின் மேல் இன்றிரவு அமர்ந்திருக்கிறார். அப்படி செய்யும் மற்ற போதகர்களும் கூட்டத்தில் இருக்கின்றனர். நான் ஒருவன் மாத்திரமே வியாதியஸ்தர்-களுக்காக ஜெபிப்பவன் என்னும் அபிப்பிராயத்தை உங்களுக்களிக்க நான் விரும்பவில்லை. பாருங்கள்-? தேவன், அவர் என்னைத் தான் உபயோகிக்க வேண்டுமென்று இல்லை, அவர் உங்களையோ அல்லது வேறு யாரையோ உபயோகிக்கலாம். முக்கியமான காரியம் என்னவெனில், அவர் கூறினது சத்தியமென்று விசுவாசிப்பதாகும். இப்பொழுது, கூறப்பட்டதை உறுதிப்படுத்து-வதற்கென, நாம் சற்று நேரம் தலை வணங்குவோம். 138. ஜெப அட்டைகள் கிடைக்காமலிருந்து, வியாதியாயிருந்து ஜெபித்துக் கொண்டிருப்பவர்கள், இவ்வாறு தேவனை வேண்டிக் கொள்ளுங்கள். “கர்த்தராகிய இயேசுவே, விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்-கும்; கர்த்தர் அவனை எழுப்புவார் என்று வேதம் கூறியுள்ளதை நான் அறிவேன்.(யாக்.5:15). இயேசுகிறிஸ்து நேற்றும். இன்றும் என்றும் மாறாதவரா-யிருக்கிறார்' என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் மாறாதவராயிருப்பாரானால், அவர் புரிந்த அதே செயல்களை இப்பொழுதும் புரிய வேண்டும். மேலும் தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது என்று வேதம் கூறுகின்றது. 139. வார்த்தையானது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னும் நபரில் மாமிசத்தில் வெளிப்பட்ட போது, அதை தான் தேவன் குமாரன் மூலம் செய்தார் என்று நாமறிவோம். இயேசு நான் என் பிதாவின் இடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்கள் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்,'' என்று யோவானில் கூறியுள்ளார் (யோவான்.14:12), அது மாத்திரமல்ல, அவர் இப்பொழுது பிரதான ஆசாரியராயிருக்கிறார் என்று வேதம் உரைக்கின்றது, அதை நாமனைவரும் விசுவாசிக்கின்றோமா-? நிச்சயமாக. நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடிய (ஆங்கில வேதாகமத்தில் 'touched' தொடப்படக் கூடிய; எபி,4:15) பிரதான ஆசாரியர் அவர், நான் அல்ல, அவர், வேறு எந்த மனிதனும் இல்லை. நமது பல வீனங்களைக்குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராக அவர் இருக்சிறார். 140. நீங்கள் அடி. எடுத்து வைத்து முன் வந்து உங்களை அவிசுவாசத்தை எல்லாம் அகற்றி விட்டு நானும் மகத்தான பிரதான ஆசாரியராகிய உம்மைத் தொடட்டும்'' என்று கூறுவீர்களானால்-! அவர் பிரதான ஆசாரியராக இருந்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரானால், அவர் அன்று புரிந்த செயல்களையே இன்றும் புரிவார். ஏனெனில் அவர் மாறாதவராயிருக்கிறார். 141. அவர் இவ்வுலகிலிருந்த போது, ஒரு சமயம் ஒரு ஸ்திரீ தன் கையால் அவரைத் தொட்டாள். அவர் அந்த தொடுதலை உணர்ந்து திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்-?'' என்று கேட்டார். அவர்கள் அனைவரும் மறுத்தனர். ஆனால் அவரோ சிந்தனைகளைப் பகுத்தறிந்து, அந்த ஸ்திரீயைக் கண்டு பிடித்து, அவளுக்கிருந்த வியாதி என்னவென்று கூறினார். அவளுடைய விசுவாசம் அவளைச் சுகமாக்கினது. 142. அவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஒருக்கால் அந்த ஸ்திரீக்கு ஜெப அட்டை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவளுக்கு விசுவாசம் இருந்தது. அது மாத்திரம் தான் அவசியம். விசுவாசமாயிருங்கள். அந்த மகத்தான வைத்தியரைத் தொடுங்கள். ஒரு தெய்வீக வரத்தின் மூலம், நான் வழி விட்டு விலகி நின்று பரிசுத்த ஆவி என்ன செய்ய சித்தமாயிருக்கிறாரோ, அதை செய்யும்படி அனுமதித்தால்... அது ஒரு வரம், அது கற்பனையல்ல. அது கற்பனையாயிருக்குமானால், கிரியை செய்யாது. அது உண்மையாயிருந்தால் கிரியை செய்யும். இயேசு அப்படித் தான் கூறினார். 'நான் என் சுயமாய் ஒன்றும் செய்ய வில்லை. என்னில் வாசமாயிருக்கிற பிதாவே அதை செய்கிறார்.'' எனவே அது நானாக இருக்க முடியாது. அவர் தேவனுடைய குமாரன். நானோ அவருடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவி. 143. விசுவாசியுங்கள், நெருக்காதீர்கள், விசுவாசமாயிருந்து, “கர்த்தராகிய இயேசுவே, உமது வஸ்திரத்தை நான் தொடட்டும்'' என்று கூறுங்கள். எளிய விதத்தில் ஜெபம் செய்யுங்கள், ஜெபம் செய்து கொண்டிருங்கள், எல்லோரும், நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். ஜெபம் செய்து, விசுவாசமாய் இருங்கள். நிதானமாயிருங்கள். அவசரப்படாதீர்கள், நெருக்க முயலாதீர்கள். விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் ஒவ்வொரு வரும் விசுவாசிக்கி-றீர்களா-? விசுவாசிக்க முடிகிறதா-? நடந்து போன காரியங்களையெல்லாம் மறந்து விடுங்கள், இயேசு வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்று மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள். அது வழக்கத்திற்கு மாறானது என்று எனக்குத் தெரியும். ஆனால் இயேசு அதை வாக்களித்துள்ளார் சற்று நேரம், கூடுமான வரை, பயபக்தியாயிருங்கள். பிறகு நாம் ஜெப வரிசையைத் தொடங்குவோம். அவர் அதை நிச்சயம் செய்வார் என்று நான் கூறவில்லை, அவர் செய்யலாம். தேவனுடைய கிருபையினால், என் சுய சிந்தையிலிருந்து இப்பொழுது நான் விடுவிக்கப்பட்டேன் என்று நினைக்கிறேன். அவர் தாமே... உங்கள் தலையை உயர்த்த வேண்டுமென்று தோன்றினால், இந்த பக்கம் பார்த்து ஜெபத்தில் இருங்கள். பேதுருவும் யோவானும், “எங்களை நோக்கிப் பார்'' என்று கூறினது போல,(அப் 3:4)...... அவர்கள் கூறுவதை கவனித்துக் கேட்க வேண்டும் என்பதற்காக. 144. நீங்கள் கூட்டத்திலிருக்கிறீர்கள். இங்கு அமர்ந்திருக்கும் மார்ட்டின் பையன்களைத் தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. இங்கு அமர்ந்திருப்பது சகோ.டால்டன் என்று நினைக்கிறேன்- எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை, நிறக்கண்ணாடி அணிந்திருப்பவர். அவரை விட்டு விட்டு, நான் அறியாத ஜனங்களிடம் கவனத்தைச் செலுத்த விரும்புகிறேன். 145. எப்பொழுது... இயேசுகிறிஸ்து தாமே வல்லமையுடன் வந்து இந்நாளுக்கென வாக்களிக்கப்பட்டுள்ள வேத வாக்கியம் மல்கியா 4-ன்படி நிறைவேறுவதை நீங்கள் காண்பீர்களாக-! அது நிறைவேற வேண்டும்-! ஏதாவதொன்று அதை செய்யவேண்டும். தேவன் அதை வாக்களித்துள்ளார். 146. இங்கு ஒரு ஸ்திரீ அமர்ந்திருக்கிறாள். அவள் நாளை ஆஸ்பத்திரிக்கு செல்லவிருக்கிறாள். அவள் வாகன விபத்திற்குள்ளானாள். அவளுக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது. கரங்கள் அடிபட்டுள்ளன... உன்னிடம் ஜெப அட்டை இருக்கிறதா? இல்லை. நான் உனக்கு அந்நியன் அல்லவா-? உன்னை எனக்குத் தெரியாது. நமக்கு ஒருவரையொருவர் தெரியாது. இல்லையா-? என் பிரசங்கத்தை நீ கேட்டாய். உன்னைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்று உனக்குத் தெரியும். அது உண்மையல்லவா-? அப்படியானால், உன் கையையுயர்த்து. கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக-! விசுவாசி, நீ ஆஸ்பத்திரிக்கு போக வேண்டியதில்லை. உன் கஷ்டம் நீங்கி விட்டது. அந்த ஸ்திரீ எதைத் தொட்டாள்-? 147. அவளுக்குப் பின்னால் ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறார்... அந்த ஒளியை உங்களால் பார்க்க முடியவில்லையா-? அந்த சொகுசாவின் நிறமுள்ள ஒளி நகர்ந்து செல்வதை பாருங்கள். அவனுக்குப் பின்னால் நேராக ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறார். அவர் யாரோ ஒருவருக்காக ஜெபம் செய்து கொண்டு இருக்கிறார். அது ஆஸ்பத்திரியிலுள்ள அவருடைய சகோதரன். தேவன் உங்கள சகோதரனை சுகப்படுத்தி, புத்தி சுவாதீனத்தை கொடுப்பார் என்று விசுவாசிக்கிறீர்களா-? நான் உங்களுக்கு அந்நியன். அது சரியா-?... விசுவாசி யுங்கள். சரி, நீங்கள் விரும்பினதைப் பெற்றுக் கொள்வீர்கள். அவர் எதைத் தொட்டார்-? 148. அதற்கு பின்னால் ஒரு ஸ்திரீ அமர்ந்திருக்கிறாள். அந்த ஒளியை நீங்கள் காண்கிறீர்களா-? உல்களால் அதை காண முடிகின்றதா-? இங்கு பாருங்கள். பாருங்கள்-! எல்லோரும் பாருங்கள். அது ஒரு விதமான சொகுசா- வின் நிறமுள்ள வட்டம். அது ஒரு ஸ்திரீயின் மேல் வந்திருக்கிறது. அவள் யாருக்காகவோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறாள். இரண்டு பிள்ளைகள்-பேரனும், கொள்ளு பேரனும். அந்த ஸ்திரீ இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல. அவள் கலிபோர்னியாவைச் சேர்ந்தவள். அவள் ஜெபத்திற்காக இங்கு வந்திருக்கிறாள். அவளுடன் வேறு யாரோ இருக்கிறாள். அது அவளுடைய சகோதரி; சிகப்பு ஆடை அணிந்து கொண்டு அங்கு அமர்ந்திருக்கிறாள். அவளுக்கு காக்காய்-வலிப்பு உள்ளது. அது உண்மை. அவளும் கலிபோர்னியா-வைச் சேர்ந்தவள். நீ அவளை உன்னுடன் கொண்டு வந்திருக்கிறாய். உன் பெயர் மேரி. உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா-? அவை யாவும் உண்மையா-? அப்படியானால் உன் கையை ஆட்டு. உன் முழு இருதயத்தோ-டும் விசுவாசிக்கிறாயா-? அப்படியானால் நீ கேட்டதைப் பெற்றுக் கொள்வாய். 149. எனக்கு அவர்களைத்தெரியுமா என்று யாராகிலும் கேட்க விரும்பினால்.. ஸ்திரீயே, உன்னிடம் ஜெப அட்டை உள்ளதா-? இல்லை. உனக்கு அவசியமில்லை. 150. இங்கு ஒரு மனிதன் வரிசையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு கால் மூட்டுகளில் கோளாறு. தேவன் அவருடைய கால் மூட்டுகளை சுகமாக்குவார் என்று அவர் விசுவாசித்தால், அவர் எதற்காக ஜெபம் செய்தாரோ, அதைப் பெற்றுக் கொள்வார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சரி ஐயா, உங்கள் கால் மூட்டு தொல்லை தீர்ந்து விட்டது. உங்களிடம் ஜெப அட்டை உள்ளதா-? இல்லை. உங்களுக்கு அது அவசியமில்லை. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 151. இங்கு அமர்ந்துள்ள ஸ்திரீக்கு பெண்களுக்கு ஏற்படும் கோளாறு உள்ளது. நீ விசுவாசிக்கிறாயா-? அங்கு ஒரு ஸ்திரீ... (ஓ, என்னே, இவள் அதை இழக்கப் போகின்றாள்) அவள் சிகப்பு ‘கோட்' அணிந்திருக்கிறாள். அவளுடைய பெயர் திருமதி.டாலி. உன் முழு இருதயததோடும் விசுவாசி. திருமதி.டாலி, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன்னை குணமாக்குவார். 152. அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். என் வாழ்க்கையில் அவளை நான் கண்டதில்லை, “அப்படியானால் அவளுடைய பெயர் சொல்லி எப்படி அழைத்தீர்கள்-?'' என்று நீங்கள் கேட்கலாம். இயேசு,'' உன் பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்'' என்றார். அது சரியா-? அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற அவர் 'தாம் அல்லவா-? அது உண்மையென்று விசுவாசிக்கிறீர்களா-? இயேசு என்ன கூறினார்-? அது மறுபடியும் நிகழும் என்று. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் தோன்றுவதற்கு முன்பு, தெரிந்து கொள்ளப்பட்ட சபையாகிய ஆபிரகாமுக்கும் அவனை சார்ந்தோருக்கும் அளிக்கப்பட்ட கடைசி அடையாளம் அதுவே. அது சரியா-? கர்த்தர் ஆபிரகாமுக்கு, அவனுடைய பிரயாணத்தின் போது, அடையாளங்களைக் கொடுத்து வந்தார். அவ்வாறே சபையும் அடையாளங்-களைப் பெற்று வந்தது ஆனால் கர்த்தருடைய தூதன் இறங்கி அதை செய்த போது, அவர் விசுவாசிக்காத புறஜாதியாரை அழித்துப் போட்டார் அதன் பின்பு அவர்கள் ஆவலாக எதிர்நோக்கியிருந்த குமாரன்- ஈசாக்கு- தோன்றினான். 153. இந்த ஊழியம் விரைவில் முடிவு பெறும். பின்பு எதிர்நோக்கி இருக்கும் குமாரன் பிரத்தியட்சமாவார். சபையானது லூத்தான்களின் வழியாக நீதிமானாக்கப்படுதல், வெஸ்லியர்களின் வழியாக பரிசுத்தமாக்கப்படுதல், பெந்தெகொஸ்தேயினரின் வழியாக பரிசுத்தாவியின் அபிஷேகம் இவைகளை கடந்து வந்து, இப்பொழுது தலைக்கல்லில் முடிவு பெறுகிறது. ஊழியம் எல்லா முன்னடையாளங்களையும் நிறைவேற்றி, பரிபூரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது 'நெகடிவ் நிழல் ‘பாசிடிவ்'வாக மாறுகிறது. இயேசு, தம்மை விசுவாசிக்கும் சபையை எடுத்துக் கொள்ள, ஒரு நாள் வருவார் உங்களை அவிசுவாசத்தினின்று பிரித்துக்கொண்டு இன்றிரவு விசுவாசியுங்கள். அப்படி செய்வீர்களா-? 154. ஜெப அட்டைகளை வைத்திருப்பவர்கள் இப்பொழுது...... நேற்றிரவு 25-பேருக்கு ஜெபம் செய்தேன் என்று நினைக்கிறேன். அது சரியா-? அப்படித்தான் குறித்து வைக்கப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன். (சகோ. பிரான்ஹாம் ஜெபவரிசையை அழைக்கிறார்-ஆசி) 155. நமக்கு ஜெப அட்டைகள் வைத்திராதவர்களின் பகுத்தறிதலின் வரிசை இப்பொழுது இருந்தது. எனவே நான் ஜெப அட்டைகளில் எழுதப்பட்டிருந்ததை படித்துக் கூறினேன் என்று ஜனங்கள் சொல்ல முடியாது. அங்கு...... அந்த ஜனங்களிடம் ஜெப அட்டைகள் இல்லை. அவர்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தனர். அது இப்படியே போய்க்கொண்டிருக்கிறது. அரை மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக சிந்தனைகளைப் பகுத்தறியும் வரம் கிரியை செய்ததை எத்தனை பேர் கண்டீர்கள்-? பாருங்கள், நானும் சிறிது பெலனைச் சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். நான் தென் பாகத்தில் இன்னும் 40-கூட்டங்களை நடத்த வேண்டும். ஜெப அட்டைகள் வைத்து இருப்பவர்கள் இந்த பக்கம் வாருங்கள்.' 'ஏ' (A) வைத்திருப்பவர்கள் இப்பக்கம் வாருங்கள். 156. இப்பொழுது மற்றவர்களாகிய நாம், 'நம்பிடுவாய்' என்னும் பாடலை தேவனிடம் பாடுவோம். நீங்கள் பாடுவீர்களா-? நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து. நம்பிடுவாய் (அவ்வளவு தான். நம்புங்கள்.. எதை? அவருடைய வார்த்தையை) நம்பிடுவாய் எல்லாம் கைகூடிடும் நம்பிடுவாய் நம்பிடுவாய், நம்பிடுவாய் எல்லாம் கைகூடிடும், நம்பிடுவாய் நம்பிடுவேன், நம்பிடுவேன் (சகோ.பிரான்ஹாம் ஜெப வரிசையில் உள்ளவர்களை வரிசைப்படுத்துகிறார்-ஆசி). 157. இந்த ஜனங்கள் சுகமடைய வேண்டுமென்று எத்தனை பேர் சிரத்தை கொண்டிருக்கிறீர்கள்-? பாருங்கள், சுகமளித்தலை தேவன் மாத்திரம் செய்ய முடியும். அது சரியா-? தேவன் எனக்கு அளித்துள்ள இந்த சூட்டை அணிந்து கொண்டு, இயேசு இன்றிரவு இங்கு நிற்பாரானால் -அவரே இந்த 'சூட்'டை அணிந்து கொண்டு... நீங்கள் அவரிடம், “ஆண்டவரே, என்னை சுகமாக்குவீரா-?'' என்று கேட்பீர்களானால், அவர், "நான் ஏற்கனவே அதை செய்து விட்டேன்'' என்று பதிலுரைப்பார். 'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்-டார்; அவருடைய தழும்புகளால் குணமானோம்'' அது சரியா? அவர் ஏற்கனவே அதை செய்து முடித்து விட்டார். அது இறந்த காலம். 158. நீங்கள், "ஆண்டவரே, என்னை இரட்சியும்'' என்று கூறுகின்றீர்கள். அவர் ஏற்கனவே அதை செய்து விட்டார். நீங்கள் எவ்வளவு தான் புலம்பி, ஜெபம் செய்து, உங்கள் இருக்கைகளைக் குத்தினாலும், அவர் உங்களுக்காக செய்து உள்ளதை நீங்கள் விசுவாசித்து ஏற்றுக் கொள்ளாமற் போனால், அது உங்களை, இரட்சிக்காது, அது சரியா? 159. அது போன்று தான் இதுவும், ஜனங்களை நான் சுகப்படுத்துவதில்லை. என்னால் ஜனங்களை சுகப்படுத்த முடியாது. ஆனால் அவர் என்ன செய்வார்-? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரானால், அவர் முன்பு செய்ததையே இப்பொழுதும் செய்வார். அவர் அதை தான் இந்நாளுக்கென வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவர் அவ்விதம் வாக்குரைத்துள்ளார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்-? அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். ஆம், ஐயா-! அவர் வேதாகமம் முழுவதிலும் அவ்வாறு வாக்குரைத்துள்ளார். 'ஏழு சபை காலங்கள்' ஒலி நாடாக்களை கேளுங்கள். அவை வேதப் பிரகாரமாக உண்மையென்று நிரூபிக்கப்படுவதை காணுங்கள். 160. ஜெப வரிசையில் நின்று கொண்டிருப்பவர்களே, அந்த சிந்தனைகளைப் பகுத்தறிதலின் வரிசைக்கு வரும் போது; இயேசு ஒரு தரிசனத்தைக் கண்டு, "என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்,'' என்றார். அது பெலன், சரியா-? தரிசனங்கள்- நீங்கள் வேறொரு உலகத்தில் இருக்கிறீர்கள். அவர் இப்பொழுது இங்கிருக்கிறார். அவரைத் தான் நீங்கள் தொட்டீர்கள். பாருங்கள்-? அவர் நம்முடன் இங்கிருக்கிறார் என்பதை அது காண்பிக்கிறது. 161. நீங்கள் இந்த ஜெபவரிசையில் நடந்து வந்து, உங்கள் மேல் நான் கைகளை வைத்து ஜெபம் செய்தால், நீங்கள் ஒவ்வொரு வரும் சுகம் அடைவீர்கள் என்று எத்தனை பேர் விசுவாசிக்கின்றீர்கள்-? அது இங்குள்ள பரிசுத்த ஆவியானவர் என்று விசுவாசிக்கின்றீர்களா-? அவரால் இப்படி செய்து கொண்டே போகமுடியும்... நீங்கள் வரிசையை விட்டுவிலகி, மற்றவர்களுக்கு இடமளிக்க விரும்பினால், அப்படியும் நாம் செய்யலாம், பாருங்கள்-? அது தான... பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கிறார். பாருங்கள்... அது நீங்கள் கொண்டுள்ள கருத்தைப் பொருத்தது. அது உங்களை கூடுதலாக விசுவாசிக்கும்படி செய்யுமானால்....... 162. அநேகர், ''அவர்கள் மேல் கைகளை வையுங்கள்'' என்று கற்பிக்கப்பட்டு உள்ளனர். “அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களை குணமாக்கினார்'' என்று வேதம் கூறுகின்றது(சங்.107:20). அதை தான் அவர் இப்பொழுது செய்தார். அவர் தமது வசனத்தை அனுப்பி, அதை உறுதிப்படுத்தினார். அது உங்களை குணமாக்கினது. யூதன், "நீர் வந்து, அவள் மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள்'' என்று கூறினான் (மாற்.5:23). ஆனால் ரோமனோ. "நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்.......'' என்றான் (மத்.8:8). அதை தான் நீங்கள் விசுவாசிக்கும்படி செய்ய முயல்கிறேன். பார்த்தீர்களா-? ஆனால் கைகள் உங்கள் மேல் வைக்கப்பட்டு, உங்களுக்கு ஜெபம் செய்யப்படவேண்டுமென்று நீங்கள் விரும்பினால்..... 163. இந்த ஜனங்களுக்காக நான் ஜெபம் செய்யும் போது, 'நீங்கள் ஒவ்வொருவரும் என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 164. கர்த்தராகிய இயேசுவே, இந்த ஜனங்களுக்காக இப்பொழுது நான் ஜெபிக்கிறேன், நீர் இங்கு நின்று கொண்டிருக்கிறீர் என்று அவர்களுக்குத் தெரியும். நீர் ஜனங்களின் மத்தியில் இருப்பதை அவர்கள் அறிவார்கள். இவர்கள் இன்றிரவு மேடையின் மேல் கடந்து செல்லும் போது, அவர்கள் உமது ஊழியக்காரனாகிய என்னிடத்திலோ, அல்லது இங்கு அமர்ந்துள்ள மற்ற ஊழியக்காரர்கள் இடத்திலோ வருவதாக எண்ணாமல், ஜீவனுள்ள தேவனுடைய ஆலயத்துக்கு வருவதை அவர்கள் உணர்வார்களாக-! “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளைவைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று தேவன் அளித்துள்ள வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் அவர்கள் வருகின்றனர். அவர் அதை வாக்குரைத்திருக்கிறார். 'இரட்சிக்கப்படுவேன்' என்று விசுவாசிக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான். ‘சுகம் அடைவேன்' என்று விசுவாசிக்கும் ஒவ்வொருவனும் சுகமடைவான். பிதாவே, எங்கள் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். . 165. நீர் இங்குள்ளதை நிருபிக்க, எங்களுக்கு வேதப் பூர்வமாக உம்மை அடையாளம் காண்பித்தீர். இந்த மேடையில் கடந்து செல்பவர்கள், அல்லது கூட்டத்தில் இருப்பவர்கள் ஒருவராவது, கூட்டம் முடியும் போது பெலவீன-மாயிருக்க வேண்டாம். ஆண்டவரே, மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே தமது ஜனங்களின் மத்தியில் வந்து, இங்கு நூற்றுக்கணக்கில் உட்கார்ந்து இருக்கும் ஒவ்வொருவரையும், இங்கு அமர்ந்துள்ள போதகர்களாகிய உமது ஊழியக்காரரையும் அபிஷேகிப்பாராக-! 166. பிதாவே, உம்முடைய திவ்விய சமுகத்தில் நாங்கள் இருக்கும் இந்நேரத்தில், எங்கள் ஒவ்வொருவருடைய ஜெபமும் உமது சந்நிதியை அடைவதாக. இந்த ஜனங்கள் மேடையின் மேல் கடந்து செல்லும் போது, அவர்கள் விசுவாசித்தால், இந்த இரவு அவர்கள் சுகமாகும் இரவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வார்களாக. 167. ஜனங்கள் கடந்து வந்து, அவர்கள் சுகம் பெறுவதற்காக அவர்கள் மேல் நான் கைகளை வைக்கும் போது, நீங்கள் ஒவ்வொருவரும் ஜெபத்தில் தரித்து இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வாருங்கள், ஐயா-! (சகோ. பிரான்ஹாமுக்கு முன்னால் ஜெபவரிசை கடந்து செல்கிறது -ஆசி) 168. ஒருமுறை இயேசு, நான் உங்களுக்குச் செய்ததை அறிந்து கொள்ளுங்-கள்'' என்றார். தேவன் செய்யக் கட்டளையிட்டுள்ளதையே நான் செய்தேன். 169. இப்பொழுது நாம் ஒருமித்து ஜெபம் செய்வோம்; எல்லோரும். உங்கள் சிந்தையை தேவனிடம் செலுத்தி ஜெபம் செய்யுங்கள். இப்பொழுது விசுவாசி-யுங்கள், எங்களுடன் சேர்ந்து விசுவாசியுங்கள். இங்கு வியாதியாயுள்ள ஒவ்வொருவரும்; ஒருக்கால் உங்களிடம் ஜெப அட்டை இல்லாமல் இருக் கலாம். மறுபடியும் நாளை இரவு 8.30 அல்லது 7.00-மணிக்கு நாங்கள் ஜெப அட்டைகளை விநியோகிப்போம். நாளை இரவும் ஜெபவரிசை இருக்கும். ஜெப வரிசை காரணமாக இன்றிரவு உங்களை அதிக நேரம் வைத்துக் கொண்டதற்காக வருந்துகிறேன் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. இப்பொழுது நாம் மறுபடியும் தலை வணங்குவோம். 170. பிதாவே, இப்பொழுது நாங்கள் ஜெபம் செய்யும் போது எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிக்கிறோம். உம்மைப் போல் இல்லாதவை ஏதாகிலும் எங்களிடம் காணப்பட்டால், ஆணடவரே, எங்களை மன்னியும். நாங்கள் எல்லா மனிதராலும் வாசிக்கப்படும் எழுதப்பட்ட நிருபங்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளோம். இப்பொழுது நாங்கள் உம்முடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, உமது சமுகம் உம்மை வெளிப்படுத்துவதைப் கண்டோம். ஜனங்கள் தங்கள் விசுவாசத்துக்கு சாட்சியாக மேடையின் மேல் கடந்து சென்றனர். பிதாவே, நாங்கள் கைகளை அவர்கள் மேல் வைத்தோம். ஒருவர் மாத்திரமல்ல, நாங்கள் எல்லோருமே ஒருமித்து ஜெபித்து, நீர் அவர்களுக்கு சரீர சுகத்தைக் கொடுப்பீர் என்று விசுவாசித்து, அவர்கள் மேல் எங்கள் கைகளை வைத்தோம். 171. நீர் இவ்வுலகில் இருந்தபோது, "நீங்கள் என் நாமத்தினாலே பிதா-வினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ, அதை நான் செய்வேன்'' என்று வாக்குரைத்தீர். தேவனுடைய குமாரனாகிய இயேசுவே, அதுவே உம்முடைய வாக்குத்தத்தம். அவ்வாறு வாக்களித்தவர், அந்த வாக்குத்தத்தத்தை நிறை வேற்ற இன்றிரவு தம்மை அடையாளம் காண்பித்தார். வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும் உமது கட்டளை நிறைவேற்றப்பட்டது. எனவே, அது அப்படியே ஆகக்கடவது; அது அப்படியே ஆகக்கடவது என்று எழுதி இருக்கிறதே. இயேசு கிறிஸ்துவின் வல்லமை தாமே இன்றிரவு ஒவ்வொரு நபரையும் அவிசுவாசத்தினின்று பிரித்தெடுத்து, இருதயத்தின் இரகசியங்களை அறிந்திருக்கும் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் சமுகம் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் முதன்மை ஸ்தானம் வகிப்பதாக! 172. சாத்தானையும், அவனுடைய எல்லா அந்தகார சக்திகளையும், அவன் உடைய அவிசுவாசத்தின் வல்லமையையும் நாங்கள் கடிந்து கொள்கிறோம். சாத்தானே, கர்த்தருடைய ஆவியானவர் உனக்கு விரோதமாய் கொடியேற்றி இருக்கிறார். நீ தோற்கடிக்கப்பட்டவன். இயேசு கிறிஸ்து கல்வாரியிலே உன்னை வென்றார். 173. அவர் மரணம், பாதாளம், கல்லறை இவைகளின் மேல் வெற்றி சிறந்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார். அவர் உன்னதததிற்கு ஏறி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார். அவர் இன்றிரவு பிரசன்னராயிருக்கிறார். அவர், "இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். (புரிந்துகொள்விர்கள்). இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடிருந்து உங்களுக்குள் இருப்பேன்" என்று வாக்கு உரைத்திருக்கிறார். அவருடைய வார்த்தையை நிறைவேற்றும்படியான அவருடைய பிரசன்னத்தை இன்றிரவு நாம் காண்கிறோம். இங்கு வியாதிப்- பட்டுள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமைக்கென்று இயேசு கிறிஸ்து நாமத்தினால் சுகம் பெறுவார்கள் என்று விசுவாசிக்கிறோம். ஜனங்கள் ஆமென்'' என்றனர். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக-! சகோதரனிடம் கூட்டத்தை ஒப்படைக்கிறேன்.